» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!
சனி 25, ஜூலை 2026 5:26:23 PM (IST)
உலகப் புகழ் பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் கொடி பவனியை ஒட்டி, தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை.
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா நாளை (ஜூலை 26) விமர்சையாகக் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இத்திருவிழாவின் முக்கியத் தொடக்க நிகழ்வான கொடி பவனி இன்று மாலை தூத்துக்குடி நகரப் பகுதிகளில் கோலாகலமாக நடைபெறுகிறது.
இந்தக் கொடி பவனி மற்றும் திருவிழா நிகழ்வுகளில் பங்கேற்கும் பொருட்டு, தூத்துக்குடியைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் விடுமுறை விடுத்துள்ளனர். இதன் காரணமாக, தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் சுமார் 272 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் மீன்பிடித் துறைமுகப் பகுதி இன்றைக்குச் சற்றே வெறிச்சோடி காணப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரோச் பார்க் பகுதியில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
சனி 25, ஜூலை 2026 9:33:13 PM (IST)

தூத்துக்குடியில் 'ஓ.எல்.எஸ் எக்ஸ்போ பொருட்காட்சி : மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்!
சனி 25, ஜூலை 2026 9:27:40 PM (IST)

தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா கொடி பவனி கோலாகலம்!
சனி 25, ஜூலை 2026 9:19:22 PM (IST)

பருவமழைக்கு முன் பாசனக் கால்வாய்கள், குளங்களை சீரமைக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் பாஜக கோரிக்கை!
சனி 25, ஜூலை 2026 8:18:31 PM (IST)

தூத்துக்குடி வாலிபர் அருணாச்சலம் குடும்பத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் தொலைபேசியில் ஆறுதல்!
சனி 25, ஜூலை 2026 4:40:37 PM (IST)

திருச்செந்தூரில் பல கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : சுற்றுலாத்துறை இயக்குநர் நேரில் ஆய்வு!
சனி 25, ஜூலை 2026 3:11:25 PM (IST)








