» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரோச் பார்க் பகுதியில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!

சனி 25, ஜூலை 2026 9:33:13 PM (IST)

Kanja6kgarrest.jpg

தூத்துக்குடி ரோச் பார்க் பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காகக் கஞ்சா வைத்திருந்த வாலிபரைத் தெற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி தெற்கு பகுதிக்குட்பட்ட ரோச் பார்க் பகுதியில் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் தலைமையில் காவல்துறையினர் தீவிர தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர் தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த ஜான்சன் என்பவரின் மகன் ஜேம்ஸ் சந்தோஷம் (27) என்பதும், அவர் சட்டவிரோத விற்பனைக்காகக் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, ஜேம்ஸ் சந்தோஷத்தைக் கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து 6 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory