» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூரில் பல கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : சுற்றுலாத்துறை இயக்குநர் நேரில் ஆய்வு!
சனி 25, ஜூலை 2026 3:11:25 PM (IST)

திருச்செந்தூரில் ரூ.பல கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை சுற்றுலா இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தமிழ்நாடு சுற்றுலா மாளிகை வளாகத்தில் இன்று சுற்றுலாத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை சுற்றுலா இயக்குநர்/சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் மற்றும் தொல்லியல் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு சுற்றுலா மாளிகை வளாகத்தில் தனியார் முதலீடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் 40 அறைகள் 100 நபர்கள் அமரும் வகையில் கூட்டரங்கம் கட்டப்படவுள்ள திட்ட பணிகளையும், அதேபோல் மனப்பாடு கிராமத்தில் தனியார் முதலீடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் கட்டப்படவுள்ள திட்டப் பணிகளை அவர்கள், பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்நிகழ்வில், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கௌதம், மாவட்ட சுற்றுலா அலுவலர் சீத்தாராமன், திருச்செந்தூர் வட்டாட்சியர் தங்கமாரி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரோச் பார்க் பகுதியில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
சனி 25, ஜூலை 2026 9:33:13 PM (IST)

தூத்துக்குடியில் 'ஓ.எல்.எஸ் எக்ஸ்போ பொருட்காட்சி : மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்!
சனி 25, ஜூலை 2026 9:27:40 PM (IST)

தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா கொடி பவனி கோலாகலம்!
சனி 25, ஜூலை 2026 9:19:22 PM (IST)

பருவமழைக்கு முன் பாசனக் கால்வாய்கள், குளங்களை சீரமைக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் பாஜக கோரிக்கை!
சனி 25, ஜூலை 2026 8:18:31 PM (IST)

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!
சனி 25, ஜூலை 2026 5:26:23 PM (IST)

தூத்துக்குடி வாலிபர் அருணாச்சலம் குடும்பத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் தொலைபேசியில் ஆறுதல்!
சனி 25, ஜூலை 2026 4:40:37 PM (IST)








