» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூய்மைப்பணியாளர்கள் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் - ஆட்சியர் தகவல்!

திங்கள் 20, ஜூலை 2026 4:44:37 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு தூய்மைப்பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார். 

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி பகுதியில் உள்ள தூய்மை பணிபுரிவோர், தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்யப்படாமல் உள்ளவர்கள் புதியதாக பதிவு செய்திடவும் மற்றும் ஏற்கனவே பதிவு செய்த உறுப்பினர்கள் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. 

இம்முகாமானது 25.07.2028 அன்று தூத்துக்குடி / திருச்செந்தூர் / கோவில்பட்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும், 01.08.2026 அன்று தூத்துக்குடி / ஸ்ரீவைகுண்டம் / திருச்செந்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும், 08.08.2026 அன்று தூத்துக்குடி / திருச்செந்தூர் / கோவில்பட்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும், 16.08.2026 அன்று தூத்துக்குடி / ஸ்ரீவைகுண்டம் / திருச்செந்தூர் / விளாத்திக்குளம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிம் நடைபெறவுள்ளது. 

எனவே தூய்மை பணிபுரியும் பணியாளர்கள் உரிய அவணங்களுடன் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory