» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் : 20 வழக்குகளுக்கு தீர்வு: ரூ.75.25 லட்சம் வசூல்!
சனி 18, ஜூலை 2026 5:17:07 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 20 வழக்குகளுக்கு ரூ.75.25 லட்சம் மதிப்பில் சுமுகத் தீர்வு காணப்பட்டது.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆகியவற்றின் உத்தரவின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (18.07.2026, சனிக்கிழமை) சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான சுபாதேவி தலைமை தாங்கி இந்நீதிமன்றத்தைத் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் மற்றும் சாத்தான்குளம் ஆகிய 7 இடங்களில் தலா ஓர் அமர்வு வீதம் மொத்தம் 7 அமர்வுகளில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் சமாதானமாகச் செல்லக்கூடிய மேல்முறையீட்டுக் குற்றவியல் வழக்குகள், மாற்றுமுறை ஆவணச் சட்ட வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
இச்சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில், தூத்துக்குடி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி M. பீரித்தா, நீதித்துறை நடுவர் எண்-3 நடுவர் M. விஜய் ராஜ்குமார் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள், வழக்காடிகள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டனர்.
இன்றைய சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 153 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அவற்றில் 20 வழக்குகளுக்குப் பரஸ்பரம் சுமுகமான முறையில் தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட மொத்தத் தீர்வுத் தொகை 75 லட்சத்து 25ஆயிரத்து 485 ரூபாய் ஆகும்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நடைபெற்ற இந்தச் சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும், தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும் முதுநிலை உரிமையியல் நீதிபதியுமான ஏ.வி. சுபாஷினி மிகச் சிறப்பாகச் செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் நெய்தல் கலைத் திருவிழா நிறைவு : கனிமொழி எம்பி நெகிழ்ச்சி!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:12:56 AM (IST)

உர விற்பனை நிலையங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு : அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:03:39 AM (IST)

கோவில்பட்டியில் கம்பன் கழகத்தின் இலக்கிய ஆய்வரங்கம்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 7:53:50 AM (IST)

தூத்துக்குடி 2-வது ரயில்வே கேட் பிரச்சனைக்குத் தீர்வு : கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை மனு!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 8:44:34 PM (IST)

சுதந்திர தினத்தில் சுடுகாட்டில் குடியேறி மக்கள் போராட்டம்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 8:38:22 PM (IST)

சிறப்பாகச் செயல்பட்ட காவல் துறையினருக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. நற்சான்றிதழ்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 7:53:54 PM (IST)









