» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தொல்காப்பியத்தைத் தொடர்ச்சியாக எழுதி உலக சாதனை முயற்சி: அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டுகள்!

சனி 18, ஜூலை 2026 4:53:16 PM (IST)

Tholkappiayamti.jpg

கோவில்பட்டியில் உள்ள கி. ராஜநாராயணன் நினைவரங்கத்தில், தமிழ் இலக்கண நூலான 'தொல்காப்பியத்தை' முழுமையாக மனப்பாடம் செய்து, அதனைத் தொடர்ச்சியாக எழுதி உலக சாதனை படைக்கும் முயற்சியில் சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி உமா மகேஸ்வரி ஈடுபட்டுள்ளார்.

இந்த அரிய உலக சாதனை முயற்சி, ஜூலை 18-ஆம் தேதி (இன்று) காலை 8 மணிக்குத் தொடங்கி, நாளை (ஜூலை 19) காலை வரை தொடர்ச்சியாக நடைபெற்று நிறைவடைகிறது. புதுச்சேரியைச் சேர்ந்த ‘ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ நிறுவனம் இந்தச் சாதனை முயற்சியை முறைப்படி கண்காணித்துப் பதிவு செய்து வருகிறது.

தொல்காப்பியத்தை எழுதி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டு வரும் மாணவி உமா மகேஸ்வரியை நேரில் சந்தித்து, அவருக்குப் பயனாடை அணிவித்தும், வாழ்த்துகளைத் தெரிவித்தும் பலரும் ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

அதன்படி, கோவில்பட்டி மகிழ்வோர் மன்ற நிறுவனர் டாக்டர் ஸ்ரீ வெங்கடேஷ், கோவில்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் (DSP) ஜெகநாதன், புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமண பெருமாள், பசும்பொன் தேவர் கல்வி அறக்கட்டளை நிறுவனர் பரமசிவம் ஆகியோர் மாணவியைப் பாராட்டினர்.

மேலும், கோவில்பட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்து முருகன், ரமேஷ் குமார், சீனிவாசன், விநாயகா ரமேஷ், எம்.எஸ்.எஸ்.வி. பாபு, தாமோதரன் கண்ணன், கிருஷ்ணசாமி, மாரியப்பன், கண்ணன், ராஜ்குமார், நடராஜன், பரமேஸ்வரன் மற்றும் மகிழ்வோர் மன்ற நிர்வாகிகள் டாக்டர் லதா வெங்கடேஷ், ஜான் கணேஷ், வெள்ளைச்சாமி, துரைராஜ், சேர்மதுரை, மோகன்ராஜ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டு மாணவிக்குத் தங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்த உலக சாதனை முயற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி ஆசிரியர்கள் ராஜசேகர் மற்றும் ஜான்சிராணி ஆகியோர் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory