» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஜீவன் ரக்ஷா பதக் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர் விஷு மகாஜன் அழைப்பு!

சனி 18, ஜூலை 2026 3:46:17 PM (IST)

collectorVishuMahajan.jpg

ஜீவன் ரக்ஷா பதக் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார். 

நீரில் மூழ்குதல், விபத்துகள், தீ விபத்துகள், மின்சாரம் தாக்கி இறத்தல், நிலச்சரிவுகள், விலங்குத் தாக்குதல் மற்றும் சுரங்க மீட்புப் பணிகள் போன்ற உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில் பிறரின் உயிரைக் காப்பாற்றியவர்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் 'ஜீவன் ரக்ஷா பதக்' விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

விருதின் பிரிவுகள் மற்றும் தகுதிகள்: இவ்விருது சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக், உத்தம ஜீவன் ரக்ஷா பதக் மற்றும் ஜீவன் ரக்ஷா பதக் என மூன்று பிரிவுகளைக் கொண்டது. இதற்கான உயிர் காக்கும் செயல் கடந்த 2024 அக்டோபர் 1ஆம் தேதிக்குப் பின்னர் நிகழ்த்தப்பட்டதாக இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:

நிர்ணயிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் பின்வரும் விபரங்களை இணைக்க வேண்டும்:

1. விண்ணப்பதாரரின் சுயவிவரக் குறிப்பு (Bio-Data). 

2. அதிகபட்சம் 250 சொற்களுக்குள் அமைந்த சம்பவ விபர அறிக்கை. 

3. சம்பவத்தின் வரிசைமுறை, மீட்பாளரின் உடனடி செயல்பாடு, உயிருக்கு ஏற்பட்ட ஆபத்து மற்றும் ஆற்றிய பங்களிப்பு குறித்த தெளிவான விபரங்கள். 

முழு விபரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை வரும் 27.07.2026-க்குள், "மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி-628101" என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும் எனத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory