» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி : ஆணையர் ப்ரியங்கா துவக்கி வைத்தார்!

வெள்ளி 17, ஜூலை 2026 9:36:16 PM (IST)

censusRallytuty.jpg

தூத்துக்குடியில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை முன்னிட்டு பொதுமக்கள் தங்களின் விபரங்களைச் சுய கணக்கெடுப்பு முறையில் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் 2027 ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதையொட்டி, (Self-Enumeration) பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட இப்பேரணியை முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான சி.ப்ரியங்கா கொடியசைத்துத் துவக்கி வைத்தார். 

இந்நிகழ்வில் உதவியாட்சியர் (பயிற்சி), துணை ஆணையர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர். இப்பேரணியில் தூத்துக்குடிப் பகுதி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பெருந்திரளாகப் பங்கேற்று, மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கியத்துவம் மற்றும் அலைபேசி/இணையம் வழி சுய கணக்கெடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory