» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக ஷேக் அப்துல் காதர் பொறுப்பேற்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 8:24:53 PM (IST)
சாத்தான்குளம் காவல் நிலையத்திற்குப் பொறுப்பு காவல் ஆய்வாளராக ஷேக் அப்துல் காதர் நியமிக்கப்பட்டுப் பொறுப்பேற்றுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ஸ்டீபன் ஜோஸ், நெல்லை மாவட்டத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனை அடுத்து காலியாக இருந்த பணியிடத்திற்கு, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவல் ஆய்வாளர் ஷேக் அப்துல் காதர் பொறுப்பு காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அவருக்குச் சாத்தான்குளம் உதவி ஆய்வாளர்கள், காவல் துறையினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் தங்களின் பிரச்சனைகள் குறித்து நேரடியாகப் புகார் அளிக்கலாம் என்றும், அதற்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புதிய ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உர விற்பனை நிலையங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு : அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:03:39 AM (IST)

கோவில்பட்டியில் கம்பன் கழகத்தின் இலக்கிய ஆய்வரங்கம்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 7:53:50 AM (IST)

தூத்துக்குடி 2-வது ரயில்வே கேட் பிரச்சனைக்குத் தீர்வு : கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை மனு!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 8:44:34 PM (IST)

சுதந்திர தினத்தில் சுடுகாட்டில் குடியேறி மக்கள் போராட்டம்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 8:38:22 PM (IST)

சிறப்பாகச் செயல்பட்ட காவல் துறையினருக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. நற்சான்றிதழ்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 7:53:54 PM (IST)

தி பார்க் கிண்டர்கார்டனில் 80-வது சுதந்திர தின விழா!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 7:44:39 PM (IST)









