» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கத்தியைக் காட்டி மிரட்டி வியாபாரியிடம் நகை, செல்போன் பறிப்பு : 2பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
வெள்ளி 17, ஜூலை 2026 8:27:04 AM (IST)
உடன்குடி அருகே வியாபாரியை வழிமறித்துக் கத்தியைக் காட்டி மிரட்டி நகை, பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்ற இரு நபர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே கொட்டங்காடு இடைச்சி விளையைச் சேர்ந்த வசீகரன் (63), உடன்குடி விலுக்குடியிருப்பு விலக்கில் பழக்கடை நடத்தி வருகிறார். இவர் நிலம் சம்பந்தமாகப் பேசுவதற்காகச் செட்டியாபத்திற்குத் தேரியூர் தென்றல் நகர் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
அப்போது, தாண்டவன்காடு கிராமத்தில் தங்கிப் பந்தல் வேலை செய்யும் ஆழ்வார்தோப்பைச் சேர்ந்த தொழிலாளி முத்துகிருஷ்ணன் (20) என்பவர் வசீகரனை வழிமறித்துள்ளார். பழக்கடைப் பழக்கத்தின் அடிப்படையில் வசீகரன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். அந்த நேரத்தில் அருகில் உள்ள முள் காட்டுப் பகுதியிலிருந்து வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவரும், முத்துகிருஷ்ணனும் இணைந்து வசீகரனைக் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர்.
அவரிடமிருந்த அரை பவுன் எடையுள்ள 2 மோதிரங்கள், சட்டைப் பையில் இருந்த ரூ.5,500 ரொக்கப் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு இருவரும் தப்பியோடியுள்ளனர். அவர்களைப் பிடிக்க முயன்றபோது வசீகரன் கீழே விழுந்து காயமடைந்தார். காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து வசீகரன் அளித்த புகாரின் பேரில், குலசேகரப்பட்டினம் காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரோச் பார்க் பகுதியில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
சனி 25, ஜூலை 2026 9:33:13 PM (IST)

தூத்துக்குடியில் 'ஓ.எல்.எஸ் எக்ஸ்போ பொருட்காட்சி : மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்!
சனி 25, ஜூலை 2026 9:27:40 PM (IST)

தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா கொடி பவனி கோலாகலம்!
சனி 25, ஜூலை 2026 9:19:22 PM (IST)

பருவமழைக்கு முன் பாசனக் கால்வாய்கள், குளங்களை சீரமைக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் பாஜக கோரிக்கை!
சனி 25, ஜூலை 2026 8:18:31 PM (IST)

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!
சனி 25, ஜூலை 2026 5:26:23 PM (IST)

தூத்துக்குடி வாலிபர் அருணாச்சலம் குடும்பத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் தொலைபேசியில் ஆறுதல்!
சனி 25, ஜூலை 2026 4:40:37 PM (IST)








