» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பஜாரில் அரிவாளுடன் பொதுமக்களை மிரட்டிய நபர் கைது!
வெள்ளி 17, ஜூலை 2026 7:57:17 AM (IST)
கயத்தாறு பஜார் பகுதியில் மதுபோதையில் அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்டு, பொதுமக்களை மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியில் வசித்து வரும் இசக்கியின் மகன் ஜெய மணிகண்டன் (25). இவர் கயத்தாறு மதுரை பிரதான சாலை, பஜார் ஐயர் பாலத்தின் அருகே உள்ள ஒரு தனியார் விடுதி முன்பு மதுபோதையில் கையில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களையும், பொதுமக்களையும் அரிவாளைக் காட்டி மிரட்டியுள்ளார்.
இது குறித்துப் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், கயத்தாறு இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் காந்திராஜன் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜெய மணிகண்டனைச் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர். அவர் கையில் வைத்திருந்த அரிவாளைப் பறிமுதல் செய்த காவல் துறையினர், அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரோச் பார்க் பகுதியில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
சனி 25, ஜூலை 2026 9:33:13 PM (IST)

தூத்துக்குடியில் 'ஓ.எல்.எஸ் எக்ஸ்போ பொருட்காட்சி : மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்!
சனி 25, ஜூலை 2026 9:27:40 PM (IST)

தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா கொடி பவனி கோலாகலம்!
சனி 25, ஜூலை 2026 9:19:22 PM (IST)

பருவமழைக்கு முன் பாசனக் கால்வாய்கள், குளங்களை சீரமைக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் பாஜக கோரிக்கை!
சனி 25, ஜூலை 2026 8:18:31 PM (IST)

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!
சனி 25, ஜூலை 2026 5:26:23 PM (IST)

தூத்துக்குடி வாலிபர் அருணாச்சலம் குடும்பத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் தொலைபேசியில் ஆறுதல்!
சனி 25, ஜூலை 2026 4:40:37 PM (IST)








