» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஜவுளிக் கடையில் ரூ.2 லட்சம் திருட்டு: பெண் உள்பட 2பேருக்கு போலீஸ் வலைவீச்சு

வெள்ளி 17, ஜூலை 2026 7:37:15 AM (IST)

கயத்தாறில் உள்ள ஜவுளிக் கடையில் திருமணத்திற்குத் துணி எடுப்பது போல நடித்து, பணப்பெட்டியிலிருந்த ரூ.2 லட்சம் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்ற பெண் உள்பட 2பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அகிலாண்டபுரம் இந்திரா காலனியைச் சேர்ந்த மகாராஜன் (32), கயத்தாறு பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு வந்த அடையாளம் தெரியாத ஒரு ஆணும் பெண்ணும், தங்களது வீட்டுத் திருமணத்திற்காகத் துணி எடுப்பதாகக் கூறி ரூ.27 ஆயிரத்திற்கு ஜவுளி ரகங்களைத் தேர்வு செய்துள்ளனர். பின்னர், பணத்தைக் கொடுத்துவிட்டுத் துணிகளை எடுத்துக்கொள்வதாகக் கூறிவிட்டு அவர்கள் கடையை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கடையில் இருந்த பணப்பெட்டியை உரிமையாளர் மகாராஜன் சரிபார்த்தபோது, அதிலிருந்த ரூ.2 லட்சம் ரொக்கப் பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து மகாராஜன் அளித்த புகாரின் அடிப்படையில், கயத்தாறு காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, ஜவுளிக்கடையில் வாடிக்கையாளர்கள் போல நடித்துப் பணத்தைத் திருடிச் சென்ற இருவரையும் தேடி விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory