» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மனைவியை கல்லால் தாக்கிய கணவர் கைது : மது குடிப்பதற்கு பணம் தராததால் வெறிச்செயல்!
வெள்ளி 19, ஜூன் 2026 12:06:11 PM (IST)
தூத்துக்குடியில் மது குடிப்பதற்குப் பணம் தராத ஆத்திரத்தில் மனைவியைக் கல்லால் அடித்துக் கொலை செய்ய முயன்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் அடுத்த இந்திரா நகர் பகுதியில் வசிப்பவர் மணிகண்டன் (38). இவர் தனியார் செல்போன் நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்குச் செல்லம்மாள் என்ற ஜெயந்தி (35) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
மது பழக்கத்திற்குப் பயங்கரமாக அடிமையான மணிகண்டன், வேலைக்குச் சரியாகச் செல்லாமல் மது குடிப்பதற்காகத் தனது மனைவி ஜெயந்தியிடம் அடிக்கடி பணம் கேட்டுத் தொந்தரவு செய்து, வீட்டில் அடிதடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். வழக்கம்போல் நேற்று இரவும் மணிகண்டன் மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு ஜெயந்தி பணம் தர மறுத்ததால் வீட்டின் அருகே கிடந்த பெரிய கல்லை எடுத்து ஜெயந்தியின் தலையில் பலமாக அடித்துக் கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்து அலறிய ஜெயந்தியின் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு உடனடியாகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் தாளமுத்து நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மின்பகிர்மான வட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டங்கள்: கால அட்டவணை வெளியீடு!
வியாழன் 25, ஜூன் 2026 8:32:24 AM (IST)

தூத்துக்குடி, திருச்செந்தூர் ரயில் வழித்தடங்களில் நவீன கருவிகள் : விபத்துகளைத் தடுக்க புதிய தொழில்நுட்பம்!
வியாழன் 25, ஜூன் 2026 8:27:52 AM (IST)

பள்ளி வேன் மீது கார் மோதி விபத்து: 3 பெண்கள் உட்பட 4 பேர் காயம்!
வியாழன் 25, ஜூன் 2026 8:21:43 AM (IST)

சிறுமியின் கட்டாயத் திருமணம் தடுத்து நிறுத்தம்!
வியாழன் 25, ஜூன் 2026 8:19:31 AM (IST)

தூத்துக்குடியில் பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் போக்சோ சட்டத்தில் கைது!
வியாழன் 25, ஜூன் 2026 7:57:04 AM (IST)

கத்திமுனையில் நகை பறித்த இளம்பெண் கைது : மேலும் ஒருவருக்கு போலீஸ் வலைவீச்சு!!
வியாழன் 25, ஜூன் 2026 7:50:44 AM (IST)








