» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பள்ளி வேன் மீது கார் மோதி விபத்து: 3 பெண்கள் உட்பட 4 பேர் காயம்!
வியாழன் 25, ஜூன் 2026 8:21:43 AM (IST)
கோவில்பட்டி அருகே புளியங்குளம் விலக்கு பகுதியில் தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த 4 பேர் காயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இழுப்பையூரணி தாமஸ் நகரைச் சேர்ந்தவர் அன்பழகன் (66). இவர் தனது மனைவி சாந்தி (58) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சுபா (32), ஜெயந்தி (40) ஆகியோருடன் தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி முடிந்து அனைவரும் காரில் மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை அன்பழகன் ஓட்டி வந்துள்ளார். நேற்று மாலை 5.30 மணியளவில் கோவில்பட்டி அருகே புளியங்குளம் விலக்கு பகுதியில் கார் வந்துகொண்டிருந்தது. அப்போது, அய்யனேரியிலிருந்து புளியங்குளத்திற்குத் தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது எதிர்பாராதவிதமாகக் கார் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த பயங்கர விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்ததுடன், காரில் பயணம் செய்த அன்பழகன், சாந்தி, சுபா, ஜெயந்தி ஆகிய 4 பேரும் உடல் காயம் அடைந்தனர். விபத்து குறித்துத் தகவல் அறிந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு ஜெயந்தி முதலுதவி சிகிச்சை பெற்றுக் கொண்டு வீடு திரும்பிய நிலையில், அன்பழகன், சாந்தி, சுபா ஆகிய 3 பேரும் தொடர்ந்து மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்து குறித்துக் கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் நாளை அண்ணாமலை இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம்: கரு நாகராஜன் பங்கேற்பு!
வியாழன் 25, ஜூன் 2026 11:28:11 AM (IST)

இந்திய வீல்சேர் கிரிக்கெட் பிரீமியர் லீக்: ஜம்மு காஷ்மீரை வீழ்த்தித் தமிழ்நாடு அணி சாம்பியன்!
வியாழன் 25, ஜூன் 2026 11:04:23 AM (IST)

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது: 32 மது பாட்டில்கள், பணம் பறிமுதல்!
வியாழன் 25, ஜூன் 2026 10:52:22 AM (IST)

குடும்பப் பிரச்சினை: பூச்சி மருந்து குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி மரணம்!
வியாழன் 25, ஜூன் 2026 10:44:22 AM (IST)

மாலுமி நிஷாந்த் மனைவிக்குத் தற்காலிகப் பணியா..? நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் இயக்கம் கண்டனம்!
வியாழன் 25, ஜூன் 2026 10:38:02 AM (IST)

அனுமதியற்ற விளம்பர பேனர்களை அகற்றாவிட்டால் 3 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி மாநகராட்சி எச்சரிக்கை!
வியாழன் 25, ஜூன் 2026 10:17:14 AM (IST)








