» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது: 32 மது பாட்டில்கள், பணம் பறிமுதல்!
வியாழன் 25, ஜூன் 2026 10:52:22 AM (IST)
தூத்துக்குடி மேல சண்முகபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற வாலிபரை தென்பாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் இன்று காலை தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, தூத்துக்குடி மேல சண்முகபுரம் ரோட்டில் இருசக்கர வாகனம் ஒன்றுடன் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த ஒரு நபரை போலீசார் இடைமறித்துச் சோதனை செய்தனர்.
அப்போது அவர், இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்துச் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவரிடமிருந்த 32 மதுபான பாட்டில்கள், 1,010 ரூபாய் ரொக்கப் பணம், 2 மொபைல் போன்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் சம்பவ இடத்திலேயே பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுடன் அந்த நபரைத் தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர் மேல சண்முகபுரம் வண்ணார் முதல் தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் நடராஜன் (40) என்பதும், அரசு மதுபானக் கடைகளில் இருந்து மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி வந்து, சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 5 பேர் காயம்!
வியாழன் 25, ஜூன் 2026 12:50:57 PM (IST)

சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக ரூ.6 லட்சம் மோசடி : தவெக நிர்வாகி மீது பரபரப்பு புகார்!
வியாழன் 25, ஜூன் 2026 12:42:04 PM (IST)

சமூகநல அலுவலகத்தில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
வியாழன் 25, ஜூன் 2026 11:57:30 AM (IST)

தூத்துக்குடியில் நாளை அண்ணாமலை இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம்: கரு நாகராஜன் பங்கேற்பு!
வியாழன் 25, ஜூன் 2026 11:28:11 AM (IST)

இந்திய வீல்சேர் கிரிக்கெட் பிரீமியர் லீக்: ஜம்மு காஷ்மீரை வீழ்த்தித் தமிழ்நாடு அணி சாம்பியன்!
வியாழன் 25, ஜூன் 2026 11:04:23 AM (IST)

குடும்பப் பிரச்சினை: பூச்சி மருந்து குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி மரணம்!
வியாழன் 25, ஜூன் 2026 10:44:22 AM (IST)








