» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடும்பப் பிரச்சினை: பூச்சி மருந்து குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி மரணம்!
வியாழன் 25, ஜூன் 2026 10:44:22 AM (IST)
தூத்துக்குடி அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக மன வேதனையில், பூச்சி மருந்து குடித்து வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரம் கட்டாலங்குளம் கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் சதீஷ்குமார் (20). இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாகக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இதனால் விரக்தியடைந்த சதீஷ்குமார், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை மீட்ட குடும்பத்தினர், உடனடி சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, கடந்த சில வாரங்களாக மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சதீஷ்குமாருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று காலை சதீஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சாயர்புரம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரது தற்கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக ரூ.6 லட்சம் மோசடி : தவெக நிர்வாகி மீது பரபரப்பு புகார்!
வியாழன் 25, ஜூன் 2026 12:42:04 PM (IST)

சமூகநல அலுவலகத்தில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
வியாழன் 25, ஜூன் 2026 11:57:30 AM (IST)

தூத்துக்குடியில் நாளை அண்ணாமலை இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம்: கரு நாகராஜன் பங்கேற்பு!
வியாழன் 25, ஜூன் 2026 11:28:11 AM (IST)

இந்திய வீல்சேர் கிரிக்கெட் பிரீமியர் லீக்: ஜம்மு காஷ்மீரை வீழ்த்தித் தமிழ்நாடு அணி சாம்பியன்!
வியாழன் 25, ஜூன் 2026 11:04:23 AM (IST)

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது: 32 மது பாட்டில்கள், பணம் பறிமுதல்!
வியாழன் 25, ஜூன் 2026 10:52:22 AM (IST)

மாலுமி நிஷாந்த் மனைவிக்குத் தற்காலிகப் பணியா..? நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் இயக்கம் கண்டனம்!
வியாழன் 25, ஜூன் 2026 10:38:02 AM (IST)








