» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நாளை அண்ணாமலை இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம்: கரு நாகராஜன் பங்கேற்பு!

வியாழன் 25, ஜூன் 2026 11:28:11 AM (IST)



தூத்துக்குடியில் அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வி த லீடர்’ புதிய இயக்கத்தின் மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறவிருக்கும் சூழலில், இக்கூட்டத்திற்கான டிஜிட்டல் பேனர் வைக்க மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வி த லீடர்’ புதிய இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் உமரி சத்தியசீலன் தலைமையில் நிர்வாகிகள் தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிராமங்கள் தோறும் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்துள்ளனர்.

முதற்கட்டமாகச் சின்னதங்கம், ராஜேஷ்கனி, துர்கையப்பன், ஆசை மாதவன், பொன் விக்னேஷ் தலைமையிலும், தொடர்ந்து சிவத்தையாபுரத்தில் ஹரிகரசுதன், ஆத்தூரில் சரவணன் தலைமையிலும், ஸ்ரீவைகுண்டத்தில் பாலமுருகன் தலைமையிலும், ஆறுமுகநேரியில் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்தப்பட்டன. இதன் மூலம் இதுவரை சுமார் 25,000 புதிய உறுப்பினர்கள் இந்த இயக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சட்டமன்றத் தொகுதி வாரியாக ஆலோசனைக் கூட்டங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் மாவட்ட அளவிலான முதலாவது ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி முத்தையாபுரம் மரியா மஹாலில் நாளை ஜூன் 26-ஆம் தேதி மாலை 4 மணிக்கு உமரி சத்தியசீலன் தலைமையில் நடைபெறுகிறது.

இயக்கத்தின் நிறுவனத் தலைவர் அண்ணாமலையின் அறிவுறுத்தலின்படி நடைபெறும் இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராகக் கரு நாகராஜன் கலந்துகொண்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த மாதம் (ஜூலை) மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட செயல்பாடுகள் மற்றும் புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகளை உமரி சத்தியசீலன், சின்னதங்கம், மாதவன், ராஜேஷ்கனி, சிவமுருகன் ஆதித்தன், பால பொய்சொல்லான், துர்க்கையப்பன், ஜமீன் கிருஷ்ணன், கார்த்திகைமீனா, எம்சி சேகர், ராஜகோபால், கந்தசாமி மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

பேனர் அனுமதி மறுப்பு - நள்ளிரவில் பரபரப்பு:

இந்நிலையில், நாளை நடைபெறவிருக்கும் இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக தூத்துக்குடி மாநகரப் பகுதியில் டிஜிட்டல் பேனர்கள் வைக்க மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த அண்ணாமலை இயக்கத்தின் நிர்வாகிகள், நேற்று நள்ளிரவில் மாநகராட்சி அலுவலர்களைச் சந்தித்து அனுமதி மறுப்பிற்கான காரணங்கள் குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory