» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 5 பேர் காயம்!
வியாழன் 25, ஜூன் 2026 12:50:57 PM (IST)

விளாத்திகுளம் அருகே திருமண நிகழ்விற்காகச் சென்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆத்தியப்பன் மகன் விஜய் (25). இவர் விளாத்திகுளம் அருகே உள்ள கே.துரைச்சாமிபுரம் கிராமத்தில் நடைபெறும் தனது உறவினரின் திருமணத்திற்காக வந்துள்ளார். திருமண நிகழ்வை ஒட்டி, கே.துரைச்சாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த நவீன்குமார் (18), கடால்குடி மற்றும் பூசனூர் கிராமங்களைச் சேர்ந்த முருகேசன் (26), மாரிமுத்து (39), கண்ணன் (40) ஆகிய 4 பேரையும் காரில் அழைத்துக் கொண்டு கே. துரைசாமி புரத்திலிருந்து விளாத்திகுளம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
கார் இடைச்சியூரணி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரத்தில் இருந்த ஒரு சிறிய பாலத்தின் மீது பலமாக மோதியது. மோதிய வேகத்தில் காற்றில் தூக்கி வீசப்பட்ட கார், அருகில் இருந்த பள்ளத்திற்குள் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரை ஓட்டிய கோவில்பட்டியைச் சேர்ந்த விஜய் மதுபோதையில் இருந்ததாகவும், கார் கிராமத்தில் இருந்து கிளம்பும் போதே அசுர வேகத்தில் இயக்கப்பட்டதே இந்த விபத்திற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
விபத்து குறித்துத் தகவல் அறிந்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து கிடந்த காரை நேராகத் திருப்பி, உள்ளே சிக்கியிருந்த விஜய், நவீன்குமார், முருகேசன், மாரிமுத்து மற்றும் கண்ணன் ஆகிய 5 பேரையும் மீட்டனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து விளாத்திகுளம் போலீசார் முறைப்படி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக ரூ.6 லட்சம் மோசடி : தவெக நிர்வாகி மீது பரபரப்பு புகார்!
வியாழன் 25, ஜூன் 2026 12:42:04 PM (IST)

சமூகநல அலுவலகத்தில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
வியாழன் 25, ஜூன் 2026 11:57:30 AM (IST)

தூத்துக்குடியில் நாளை அண்ணாமலை இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம்: கரு நாகராஜன் பங்கேற்பு!
வியாழன் 25, ஜூன் 2026 11:28:11 AM (IST)

இந்திய வீல்சேர் கிரிக்கெட் பிரீமியர் லீக்: ஜம்மு காஷ்மீரை வீழ்த்தித் தமிழ்நாடு அணி சாம்பியன்!
வியாழன் 25, ஜூன் 2026 11:04:23 AM (IST)

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது: 32 மது பாட்டில்கள், பணம் பறிமுதல்!
வியாழன் 25, ஜூன் 2026 10:52:22 AM (IST)

குடும்பப் பிரச்சினை: பூச்சி மருந்து குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி மரணம்!
வியாழன் 25, ஜூன் 2026 10:44:22 AM (IST)








