» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி, திருச்செந்தூர் ரயில் வழித்தடங்களில் நவீன கருவிகள் : விபத்துகளைத் தடுக்க புதிய தொழில்நுட்பம்!
வியாழன் 25, ஜூன் 2026 8:27:52 AM (IST)
ரயில் விபத்துகளை முழுமையாகத் தவிர்க்கும் வகையில் தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் நெல்லை பிராந்தியங்களில் உள்ள முக்கிய ரயில்வே கேட்டுகளில் தானியங்கி முறையில் தனிப்பட்ட எண் உருவாக்கும் நவீன கருவிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ரயில்வேயில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் நோக்கில், சிக்னல் அமைப்புகளுடன் மின்னணு முறையில் இணைக்கப்படாத ரயில்வே கேட்டுகளை நவீனப்படுத்தும் பணிகளைத் தெற்கு ரயில்வே தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது.
முன்பு, ரயில் வரும் விபரத்தைக் கேட் கீப்பரிடம் நிலைய அதிகாரி தெரிவித்துவிட்டதை உறுதி செய்ய, இருவருக்குள்ளும் பிரத்யேக எண்கள் புத்தகங்கள் வழியாகப் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இம்முறையை மாற்றி, தற்போது ரயில்வே கேட் முழுமையாக மூடப்பட்டிருப்பதைச் சென்சார்கள் மூலம் உறுதி செய்யும் தானியங்கி தனிப்பட்ட எண் உருவாக்கும் நவீன கருவி பொருத்தப்பட்டு வருகிறது.
புதிய நடைமுறையின்படி, ரயில்வே கேட் முழுமையாக மூடப்பட்டவுடன் அங்குள்ள சென்சார்கள் அதனை உறுதி செய்யும். அதன் பிறகே இந்த நவீன கருவி மூலம் தானியங்கி முறையில் ஒரு தனிப்பட்ட எண் உருவாக்கப்பட்டு, அது நிலைய மேலாளருக்கு மின்னணு முறையில் அனுப்பப்படும். இந்த எண் கிடைத்த பின்னரே அந்த வழித்தடத்தில் ரயில்கள் கடந்து செல்ல அனுமதிக்கப்படும்.
மேலும், இந்த முழு உள்கட்டமைப்பு நடவடிக்கைகளையும் கண்காணிக்க ரயில்வே கேட்டுகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமரா பதிவுகள் அனைத்தையும் அந்தந்த நிலைய மேலாளர்கள் மற்றும் மதுரை ரயில் கட்டுப்பாட்டு அலுவலக அதிகாரிகள் தொடர்ந்து நேரடியாகக் கண்காணிப்பார்கள். இப்புதிய தொழில்நுட்பம் மூலம் ஊழியர்களைக் கேட்டைத் திறக்கச் சொல்லி வற்புறுத்தும் நபர்களையும், விதிமீறல்களில் ஈடுபடும் குற்றவாளிகளையும் எளிதில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்.
இந்த புதிய வசதி முதற்கட்டமாகத் திருச்செந்தூர் - நெல்லை இடையே 7 இடங்களிலும், நெல்லை - தென்காசி இடையே 18 இடங்களிலும், வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி இடையே ஒரு இடத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு இடத்தில் கண்காணிப்பு கேமரா மட்டும் பொருத்தப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே முழுவதிலும் ஒட்டுமொத்தமாக 99 ரயில்வே கேட்டுகளில் இந்த புதிய தானியங்கி தனிப்பட்ட எண் வழங்கும் கருவி பொருத்தப்பட்டுப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்திய வீல்சேர் கிரிக்கெட் பிரீமியர் லீக்: ஜம்மு காஷ்மீரை வீழ்த்தித் தமிழ்நாடு அணி சாம்பியன்!
வியாழன் 25, ஜூன் 2026 11:04:23 AM (IST)

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது: 32 மது பாட்டில்கள், பணம் பறிமுதல்!
வியாழன் 25, ஜூன் 2026 10:52:22 AM (IST)

குடும்பப் பிரச்சினை: பூச்சி மருந்து குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி மரணம்!
வியாழன் 25, ஜூன் 2026 10:44:22 AM (IST)

மாலுமி நிஷாந்த் மனைவிக்குத் தற்காலிகப் பணியா..? நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் இயக்கம் கண்டனம்!
வியாழன் 25, ஜூன் 2026 10:38:02 AM (IST)

அனுமதியற்ற விளம்பர பேனர்களை அகற்றாவிட்டால் 3 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி மாநகராட்சி எச்சரிக்கை!
வியாழன் 25, ஜூன் 2026 10:17:14 AM (IST)

தூத்துக்குடி மின்பகிர்மான வட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டங்கள்: கால அட்டவணை வெளியீடு!
வியாழன் 25, ஜூன் 2026 8:32:24 AM (IST)








