» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ராகுல் காந்திக்கு எதிர்ப்பு: தூத்துக்குடி காங்கிரஸ் நிர்வாகி ராஜினாமா அறிவிப்பு!

சனி 9, மே 2026 12:51:21 PM (IST)

காங்கிரஸ் கட்சியினை ராகுல்காந்தி தவறாக வழிநடத்துவதாகக் கூறி தூத்துக்குடியில் காங்கிரஸ் கவுன்சிலர் சந்திரபோஸ் தனது கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "நான் கடந்த 1988 முதல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பணியாற்றி வருகிறேன். தூத்துக்குடியில் 1996 முதல் நகர் மன்ற உறுப்பினராகவும், பின்பு மாமன்ற உறுப்பினராகவும் கடந்த 30 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். 

திமுக கூட்டணி சார்பாக 2 முறையும், காங்கிரஸ் சார்பாக தனித்து போட்டியிட்டு  3 முறையும்  மாமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறேன். மேலும் காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகிறேன். மாநகராட்சி காங்கிரஸ் கொறடாவாகவும் பொறுப்பு வகித்து வருகிறேன். 

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ராகுல் காந்தியின் தவறான வழிகாட்டுதலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தவறான வழிகாட்டுதலாலும் இந்த முடிவை எடுக்கிறேன். எனது மாநகராட்சி கவுன்சிலர் பதவியைத் தவிர அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory