» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உணவகத்தில் பணம், மோட்டார் சைக்கிள் திருட்டு: போலீசார் விசாரணை!

சனி 9, மே 2026 8:40:52 AM (IST)

மணப்பாடு அருகே உள்ள உணவகத்தில் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ரொக்கப் பணம் மற்றும் மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த அந்தோணிசெல்வன் (40) என்பவர், அங்குள்ள புறவழிச்சாலையில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் வேலை பார்க்கும் ஊழியர்கள், இரவு வியாபாரம் முடிந்த பிறகு கடையிலேயே தங்குவது வழக்கம்.

அதன்படி, கடந்த 6-ம் தேதி இரவு வியாபாரம் முடிந்த பின், ஊழியர்களான மேக்சன் மற்றும் நிரஞ்சன் ஆகிய இருவரும் ஓட்டலுக்குள் தூங்கிக் கொண்டிருந்தனர். ஓட்டலுக்கு வெளியே நிரஞ்சன் தனது ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார்.

நேற்று முன்தினம் அதிகாலையில் ஊழியர்கள் கண்விழித்துப் பார்த்தபோது, அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஊழியர் நிரஞ்சனின் சட்டைப் பையில் இருந்த ரூ. 1,300 மற்றும் அவர் வெளியே நிறுத்தியிருந்த ஆட்டோவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 2,000 ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

மேலும், அதே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த சக்தி என்பவருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து ஓட்டல் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், குலசேகரன்பட்டினம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகா வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory