» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாலிபருக்கு அரிவாள் வெட்டு: இருவர் கைது!

சனி 9, மே 2026 8:45:18 AM (IST)

கோவில்பட்டி அருகே முன் விரோதம் காரணமாக வாலிபரை வழிமறித்து அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள அத்தைகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (27). தொழிலாளியான இவருக்கும், பாண்டவர்மங்கலத்தைச் சேர்ந்த தியாகராஜன் மகன் தமிழ்செல்வம் (29) என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்பகை இருந்து வந்துள்ளது.

நேற்று காலையில் வேல்முருகன் காந்திநகர் சந்திப்பு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தமிழ்செல்வம் மற்றும் அவரது நண்பர் ஒருவரும் சேர்ந்து வேல்முருகனை வழிமறித்தனர். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த தமிழ்செல்வம் தான் வைத்திருந்த அரிவாளால் வேல்முருகனைச் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த வேல்முருகன், சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வேல்முருகன் அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த தமிழ்செல்வம் (29) மற்றும் அவருக்குத் துணையாக இருந்த நடராஜபுரம் செல்வராஜ் மகன் சுந்தரபாண்டியன் (32) ஆகிய இருவரையும் கைது செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory