» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஊழல் புகார் : தொ.மு.ச. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
சனி 9, மே 2026 3:31:35 PM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ள லஞ்ச ஊழல் புகார்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக தொ.மு.ச. அறிவித்துள்ளது.
இது தொடர்பாகத் தொழிற்சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தலைமைப் பொறியாளர் மீது புகார்: மேற்பார்வைப் பொறியாளர் இயக்குநர் ராம்குமார் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலைமைப் பொறியாளராக (பொறுப்பு) பணியாற்றிய காலத்தில், பல ஒப்பந்தப் பணிகளுக்குக் கையூட்டாக 5% வரை பெற்று, விருதுநகரில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு பங்களா மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உதவி செயற்பொறியாளர் வெற்றிவேல்குமார், தான் பணிபுரியும் இடத்தில் ஒப்பந்தப் பணியாளர்களைத் தனது சொந்த வேலைகளுக்குப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. இதனைத் தட்டிக்கேட்ட தொழிற்சங்க நிர்வாகிகளைப் பழிவாங்கும் நோக்கில், ஊழல்களைச் சுட்டிக்காட்டிய காரணத்திற்காகவும், பதவி உயர்வு வேண்டாம் எனத் தெரிவித்தும் அவர்களுக்குப் பணிவிடுவிப்பு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
ஊழல் புரிந்த அதிகாரிகளைப் பாதுகாக்கும் தலைமைப் பொறியாளரின் இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டித்தும், ஊழல் மற்றும் வாரியத்திற்கு இழப்பு ஏற்படுத்தும் அதிகாரிகளுக்கு எதிராகவும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
திமுக தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பி. கீதா ஜீவன் தலைமையில் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊழல் புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏரல் ஆற்றுப்பாலப் பணிகள் நிறைவு: ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
சனி 9, மே 2026 4:56:10 PM (IST)

ராகுல் காந்திக்கு எதிர்ப்பு: தூத்துக்குடி காங்கிரஸ் நிர்வாகி ராஜினாமா அறிவிப்பு!
சனி 9, மே 2026 12:51:21 PM (IST)

மகன் இறந்த துக்கத்தில் தந்தை தீக்குளித்து தற்கொலை!
சனி 9, மே 2026 10:52:55 AM (IST)

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி - அதிர்ச்சியில் நிலைதடுமாறி விழுந்த பெண்!
சனி 9, மே 2026 10:43:37 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!
சனி 9, மே 2026 8:58:07 AM (IST)

தூத்துக்குடியில் புரோட்டா சாப்பிட்ட சட்டக்கல்லூரி மாணவர் மர்ம மரணம் - போலீசார் விசாரணை!
சனி 9, மே 2026 8:53:06 AM (IST)










