» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல் : ஆட்சியர் விஷு மகாஜன் உத்தரவு

வியாழன் 7, மே 2026 3:55:28 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மே 7-ஆம் தேதி மாலை 6.00 மணி முதல் மே 10-ஆம் தேதி காலை 6.00 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்  வெளியி்ட்டுள்ள அறிவிப்பில், "தூத்துக்குடி மாவட்டம் மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டம், பாஞ்சாலங்குறிச்சி கிராமத்தில் 08.05.2026 மற்றும் 09.05.2026 அன்று ஸ்ரீவீரசக்க தேவி உற்சவ விழா நடைபெறவுள்ளது. 

மேற்படி நாளில் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டு, சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திட 07.05.2026 மாலை 06.00 மணி முதல் 10.05.2026 காலை 06.00 மணி வரை பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) - 2023, பிரிவு 163 (1) -ன் கீழ் தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதன்படி பொதுக் கூட்டம் நடத்துவதற்கும், ஐந்து மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும், கலந்து கொள்ளும் பொதுமக்கள் அனைவரும் வாள், சுருள் கத்தி, கம்பு, வேல்கம்பு, குச்சி, கற்கள் மற்றும் இதர அபாயகரமான ஆட்சேபகரமான ஆயுதங்கள் கொண்டு வருவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் திருவிழாவிற்கு கலந்து கொள்ள அழைத்து வரப்படுவதற்கும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) - 2023, பிரிவு 163 (1) -ன் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இத்தடை உத்தரவிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் தினசரி செல்லும் ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேற்படி நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள், அன்னதானம் மற்றும் ஊர்வலங்கள் நடத்தவிருப்பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை அணுகி அனுமதி பெற்றுக் கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன்,   தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory