» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருவிக நகர் சக்திபீடத்தில் தமிழ் புத்தாண்டு விழா: ஆன்மிக இயக்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு!

திங்கள் 14, ஏப்ரல் 2025 3:34:24 PM (IST)



தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி விவசாயம் செழிக்க சிறப்பு வழிபாடு மற்றும் ஆன்மிக இயக்கம் சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு நடைபெற்றது.

மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் அருளாசியுடன் தூத்துக்குடி 3வது மைல் அருகே உள்ள திருவிக நகர் சக்திபீடத்தில் தமிழ் புத்தாண்டு விசுவாவசு விழாவையொட்டி விவசாயம் செழிக்கவும், மழை வளம் வேண்டியும், இயற்கை சீற்றம் தணியவும், மக்கள் நலமுடன் வாழவும் வேண்டி 108, 1008 தமிழ் மந்திரங்கள் கூறி குங்கும அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அன்னை ஆதிபராசக்திக்கு கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்த‌து.

இதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு படிக்காசு வழங்கும் நிகழ்ச்சியை கூட்டுறவு பண்டக சாலை பொதுமேலாளர் கந்தசாமி தொடங்கி வைத்தார். அன்னதானம் நிகழ்சியை எட்டையாபுரம் மன்ற பொறுப்பாளர் ராதிகா தொடங்கி வைத்தார். 



இதனையடுத்து தூத்துக்குடியில் ஆன்மிக இயக்கம் சார்பில் 2 இடங்களில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. மகளிர் அணி பொறுப்பாளர் யசோதா முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட‌ ஆன்மிக இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி.ஆர்.முருகன் திறந்து வைத்து நீர், மோர், தர்பூசனி மற்றும் பழங்கள் ஆகியவற்றை வழங்கினார். விழாவில், சித்த மருத்துவர் வேம்புகிருஷ்ணன், சிதம்பரநகர் மன்றம் கணேசன், துறைமுகம் பாண்டி, திருவிக நகர் சக்திபீட நிர்வாகிகள் திருஞானம், பத்மா, அனிதா, புதுக்கோட்டை பரமேஸ்வரி, அகிலா, முத்துலெட்சுமி, புவனேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital




New Shape Tailors




Thoothukudi Business Directory