» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காஷ்மீர் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் உருவப் பொம்மை எரிப்பு: காங்கிரஸ் கட்சியினர் ஆவேசம்
வியாழன் 24, ஏப்ரல் 2025 8:06:30 PM (IST)

காஷ்மீர் பகல்ஹாம் பகுதியில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் உருவ பொம்மையை ஏரித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கொடூர தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 26 பேரை சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து தூத்துக்குடி சத்திரம் பஸ் ஸ்டாப் அருகில் மாநகர் மாவட்ட தலைவர் சிஎஸ் முரளிதரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி அதன் பின்பு பயங்கரவாத கும்பலை கண்டித்து உருவ பொம்மையை தீவைத்து எரித்தனர். பின்னர் பயங்கரவாத செயலுக்கு எதிராக மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் காங்கிரஸ் எடிசன் மண்டல தலைவர்கள் செந்தூர பாண்டி, சேகர், அமைப்பு சாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், விவசாய பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், மாநகர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மரிய ஆல்வின், அமைப்புசாரா மாநில செயற்குழு உறுப்பினர் சாந்தி மேரி, மாவட்ட துணை தலைவர்கள் ரஞ்சிதம் ஜெபராஜ், டேவிட் வசந்தகுமார், தனபால் ராஜ், பிரபாகரன், மாவட்ட பொதுச் செயலாளர் மைக்கில் பிரபாகர், மாவட்ட செயலாளர்கள் கோபால், நாராயணசாமி, முனியசாமி, முத்துராஜ், காமாட்சி தனபால், வார்டு தலைவர்கள் வாசி ராஜன், சேவியர் மிசியர், அந்தோணிசாமி, மகாலிங்கம், சுப்பிரமணியன், மகேந்திரன்,சீனிவாசன், மாரியப்பன், ராஜரத்தினம், கமலா தேவி, ரத்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










