» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீடு, இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி: அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியை பரபரப்பு புகார்

வியாழன் 24, ஏப்ரல் 2025 7:57:14 PM (IST)



விளாத்திகுளம் அருகே தனது வீடு, இடத்தை சிலர் ஆக்கிரமிக்க முயல்வதாகவும் காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியை பரபரப்பு புகார் அளித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரைச் சேர்ந்த பியூலா ஜெபராணி (58) என்பவர் கழுகாசலபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பல ஆண்டுகளாக தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக புதூரில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டில் 2 மகன்களுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தனக்குச் சொந்தமான சுமார் 18 சென்ட் (800 ச.மீ) பரப்பளவு கொண்ட வீடு மற்றும் இடத்தை பார்த்திபன், பாண்டிச்செல்வம் ஆகிய நபர்கள் போலி பட்டாவை தயார் செய்து கொண்டு தங்களது இடம் என்று கூறி தொடர்ந்து அராஜகம் செய்து வருவதாகவும், கடந்தாண்டு தனக்கு கொலை மிரட்டல் விடுத்து தன்னை தாக்கியதோடு மட்டுமின்றி, தான் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றுள்ளதாகவும் இதுசம்பந்தமாக புதூர் காவல் நிலையம் முதல் மாவட்ட எஸ்.பி அலுவலகம் வரை என பல புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறுகிறார்.

மேலும், தனக்கும், தனது உடமைகளின் பாதுகாப்பிற்காக வீட்டின் முன்பு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமிராக்களையும் பொய்யாக நில உரிமைக்கோறும் நபர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் புதூரைச் சேர்ந்த கிருஷ்ணக்குமார் உட்பட அவரது குடும்பத்தினர் சமீபத்தில் சிசிடிவி கேமிராக்கள் மற்றும் தனது வீட்டை அடித்து உடைத்து சேதப்படுத்தியதாகவும் இது தொடர்பாக அவர்களின் மீது காவல்துறையில் உரிய நில ஆவணங்கள் மற்றும் சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன் புகார் அளித்தும் காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் ஒருதலை பட்சமாக நடந்து வருவதாக மாவட்ட காவல் துறை மீது புகார் கூறுவதோடு தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த இடப்பிரச்சனை தொடர்பாக தான் அளித்த புகார் மனுவின் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உடனடியாக உத்தரவு பிறப்பிப்பதோடு தன் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், தன்னுடைய புகாரை முறையாக விசாரிக்காமல் ஒருதலைப் பட்சமாக செயல்பட்ட விளாத்திகுளம் உட்கோட்ட காவல்துறையினர் மீதும் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory