» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை: விவசாயிகள் கோரிக்கை
வியாழன் 24, ஏப்ரல் 2025 8:11:09 PM (IST)

விளாத்திகுளத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ராஜேஷ், மற்றும் விவசாயிகள் விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் மற்றும் விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோரிடம் அளித்த மனுவில், "விளாத்திகுளம் தொகுதி மக்களின் பெரும் நீர் ஆதாரமாக விளங்கக்கூடியது வைப்பார் நதி கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் மழை பெரும்வெள்ளத்தால் வைப்பாறு தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டது.
ஆற்றிலிருந்து ஊற்று அமைத்து ஊற்றித்தண்ணீரை இன்றுவரை அமிர்தமாகவும், அமுதமாகவும், பருகிவரும் மக்களுக்கு பெரும்வலியாக சாக்கடையை ஆற்றில் கலந்து சீரழித்து வருவதை உடனே தடுக்க வேண்டும். நிலத்தடி நீரின் அளவு ஏரிகள், ஆறுகள், ஓடைகள் போன்ற அனைத்து மேற்பரப்பு நீர் ஆதாரங்களை விட 30 மடங்கு அதிகம் நிலத்தடி நீர் மிக அதிகமான ஆதாரமாக இருந்தாலும் வீடுகளில் பயன்படுத்தி வரும் கிணறுகளில் கூட உப்புநீர் ஊடுருவல் அதிகமாக இருக்கிறது.
உப்புநீர் ஊடுருவல் அதிகமாக இருப்பதால் இதன் விளைவாக நிலம் உப்பு ஆக மாறி பயிர்களை கொல்லும் நிலை உள்ளது. விளாத்திகுளத்தில் ராட்சத போர்வெல் மூலம் நீர் உறிஞ்சிப்படுவதை முக்கிய காரணமாக இருக்கிறது (RMG & GOODLUCK) போன்ற குடிநீர் நிறுவனங்கள் கண்மாயியும், ஆற்றையும் அருகில் நிறுவனங்களை அமைத்துக்கொண்டு தனக்கு லாபமாக பயன்படுத்தி மக்கள் நிலத்தடி நீரை பயன்படுத்தாது வகையில் சூசமாக வேலையை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

ஆற்றையும், கண்மாயியும் மாசுப்படுத்துவதில் இந்த இரண்டு நிறுவனங்கள் சளைக்காமல் செய்து வருகிறார்கள். எனவே சமூகம் பேராபத்தான இந்த இரண்டு குடிநீர் ஆலைகளை தடை செய்து வைப்பாற்றில் வெள்ளம்போல் கலக்கப்படுகின்ற கழிவுநீரை தடுத்து நிறுத்தி இந்த விளாத்திகுளம் தொகுதி மக்களையும், கால்நடைகளையும், பல்லுயிர்களையும் பாதுகாக்க, வைப்பாறு நன்னீர் பருகிட நதியை காக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










