» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிறுபான்மை மக்களுக்கு எப்போதுமே முதல்வர் உறுதுணையாக இருப்பார்: அமைச்சர் கீதா ஜீவன்
திங்கள் 14, ஏப்ரல் 2025 8:04:20 AM (IST)

சிறுபான்மை மக்களுக்கு எப்போதுமே தமிழக முதல்வர் உறுதுணையாக இருப்பார் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசினார்
வக்ஃபு வாரிய திருத்த மசோதா சட்டத்தை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஜமாத் உலமா சபை சார்பில் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட ஜமாத் உலமா சபை தலைவர் ஷேக் முஹம்மது, தலைமை தாங்கினார். ஜமாத் உலமா சபை தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் முகைதீன் அப்துல் காதர் வரவேற்று பேசினார். தூத்துக்குடி மாவட்ட ஜமாத் உலமா சபை துணைத் தலைவர் அப்துல் அழிம் வக்ஃபு வாரிய மசோதா குறித்து கண்டன உரையாற்றினார்.
இதைத்தொடர்ந்து கூட்டத்தில் தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாவட்ட தலைவர் மீராசா, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம், உலமா சபை மாநில பொருளாளர் முஜுபுர் ரகுமான், மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குனர் ஹென்றி திபேன், தமுமுக பொதுச் செயலாளர் ஹாஜாகனி, இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி ஒருங்கிணைப்பு செயலாளர் காயல் மகபூப், எஸ்டிபிஐ மாநில பொதுச் செயலாளர் அகமது நவவி, மாநக தலைவர் இம்தாதுல்லாஹ், உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
இதைத்தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசும்போது "மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்பு வாரிய திருத்த மசோதா இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான இந்த ஒரு சட்டம் நிச்சயமாக இது அறத்துப்போகும் நீங்கள் எதிர்பார்க்கிறது போல இல்லாத ஒரு நிலை உருவாகும். எல்லா அமைப்புகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளார். அதே வழியில் நம்முடைய முதலமைச்சர் முதன் முதலில் சட்டமன்றத்தில் தீர்மானம் ஏற்றினார்கள் சட்டம் வரும் முன்னே தீர்மானம் ஏற்றினார்கள் என்றார். மேலும் இந்த மசோதா குறித்து அந்த கமிட்டியில் இருந்த திமுக எம் பிகள் ஆ. ராசா அப்துல்லா ஆகியோர் கொடுத்த எந்த பரிந்துரையும் இந்த மத்திய அரசு ஏற்காமல் புறம் தள்ளி விட்டது என குற்றம் சாட்டிய அமைச்சர் நள்ளிரவில் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை நிறைவற்றினார்கள்.
மேலும் எங்களுடைய திராவிட முன்னேற்றக் கழக தலைவர் அவர்கள் முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியிலும் உறுதியாக இந்த சட்டத்தை எதிர்ப்போம் என்றும் நாங்கள் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருப்போம் என்றார்.
கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் மீராசா ஜாமியா பள்ளிவாசல் செயலாளர் எம் எஸ் எப் ரகுமான் துணைத் தலைவர் சாகுல் சிராஜுதீன், பொருளாளர் இப்ராகிம் மூசா, இந்திய யூனியன் மாநகரத் தலைவர் நவரங் சகாப்தின், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட தலைவர் அகுமது இக்பால், செயலாளர் யூசுப் மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் முகமது ஜான் அர்ரஹ்மானிய நற்சேவை மன்றம் தலைவர் அகமது ரஃபீக், பொருளாளர் முகமது குட்டி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் கிதர் பிஸ்மி மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அசன் எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் அஷ்ரப் அலி, தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி சம்சுதீன், இந்திய தேசிய லீக் கட்சி மாவட்ட தலைவர் காஜா முகைதீன், கிரசண்ட் பள்ளி செயலாளர் முகமது உவைஸ், முஸ்லிம் சமுதாய நலச் சங்க தலைவர் ஏ கே மைதீன், திரேஸ்புரம் மிராசா, ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
இந்த கூட்டத்தில் உடன்குடி வட்டார ஜமாஅத் உலமா சபை தலைவர் அம்ஜத் அலி, காயல்பட்டினம் ஜமாஅத் உலமா சபை தலைவர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட ஜமாத் உலமா சபை செயலாளர் கே எஸ் சம்சுதீன், துணைச் செயலாளர் மின்னல் அம்ஜத், திமுக மாநகரச் செயலாளர் எஸ் ஆர் ஆனந்த சேகரன் மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின் துணை மேயர் ஜெனிடா செல்வராஜ், திமுக மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், பொதுக்குழு உறுப்பினர் கோர்ட் ராஜா, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் கூட்டத்தில் திருவைகுண்டம் ஜமாஅத் உலமா சபை தலைவர் முஸ்தபா தீர்மானத்தை வாசித்தார். அப்போது ஒன்றிய அரசு நிறைவேற்றிய வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு நிறைவேற்றிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் ஆதரவு தெரிவித்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தனர். மேலும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வல்லநாடு தாமிரபரணி ஆற்றுபாலத்தில் மீண்டும் பள்ளம் : வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுறுத்தல்
வியாழன் 24, ஏப்ரல் 2025 8:21:10 PM (IST)

சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை: விவசாயிகள் கோரிக்கை
வியாழன் 24, ஏப்ரல் 2025 8:11:09 PM (IST)

காஷ்மீர் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் உருவப் பொம்மை எரிப்பு: காங்கிரஸ் கட்சியினர் ஆவேசம்
வியாழன் 24, ஏப்ரல் 2025 8:06:30 PM (IST)

வீடு, இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி: அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியை பரபரப்பு புகார்
வியாழன் 24, ஏப்ரல் 2025 7:57:14 PM (IST)

தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரிக்கை!
வியாழன் 24, ஏப்ரல் 2025 3:46:28 PM (IST)

தமிழ்நாடு உரிமைகள் திட்ட களப்பணியாளர்களுக்கு பயிற்சி: ஆட்சியர் க.இளம்பகவத் துவக்கி வைத்தார்
வியாழன் 24, ஏப்ரல் 2025 3:32:51 PM (IST)
