» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மணிமேகலை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

திங்கள் 7, ஏப்ரல் 2025 8:26:59 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வ அமைப்பினர் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட சிறந்த ஊரக மற்றும் நகர்ப்புற மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு கீழ்க்காணும் நிபந்தனைகளின் அடிப்படையில் தமிழக அரசால் மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது.

சிறந்த மகளிர் சுய உதவிக்குழு (Best SHG) தேர்விக்குரிய  நிபந்தனைகள்

1. மகளிர் சுய உதவிக்குழுக்கள் துவங்கப்பட்டு நான்காண்டுகள் முடிந்திருக்க வேண்டும்.

2. சுய உதவிக்குழு A or B Grade தர வரிசை பெற்றிருத்தல் வேண்டும்.

3. சுய உதவிக்குழு குறைந்தபட்சம் மூன்று முறை வங்கிக்கடன் பெற்று தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தியிருத்தல் வேண்டும்.

4. சுய உதவிக்குழுவில் குறைந்த பட்சம் இரண்டு முறை நிர்வாகிகளை சுழற்சி முறையில் மாற்றம் செய்திருத்தல் வேண்டும்.

சிறந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு (Best PLF) தேர்விக்குரிய நிபந்தனைகள்

1. ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு தர மதிப்பீட்டில் A or B Grade தர வரிசை பெற்றிருத்தல் வேண்டும்.

2. ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு குறைந்தபட்சம் 12 செயற்குழு கூட்டத்தில் 100% அனைவரும் வருகை புரிந்திருத்தல் வேண்டும்.

3. விதிமுறைகளின்படி 10 முதல் 15 சுய உதவிக்குழுவிற்கு ஒரு சமூக சுய உதவிக்குழு பயிற்சியாளர்கள் இருத்தல் வேண்டும்.

4. ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் இணைந்துள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் அனைவரும் வங்கிக்கடன் பெற்றிருத்தல் வேண்டும்.

5. ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கான வங்கிக்கடன் பெற்றிருத்தல் வேண்டும்.

6. திறன் மேம்பாட்டு மற்றும் வாழ்வாதாரம் தொடர்பாக உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தல் வேண்டும்.

7. சமூக நல செயல்பாடுகளில் பங்கேற்றல் வேண்டும்.

சிறந்த வட்டார அளவிலான கூட்டமைப்பு (Best BLF) தேர்விக்குரிய நிபந்தனைகள்

1. வட்டார அளவிலான கூட்டமைப்பு தர மதிப்பீட்டில் A or B Grade தர வரிசை பெற்றிருத்தல் வேண்டும்.

2. வட்டார அளவிலான கூட்டமைப்பு துவங்கப்பட்டு ஒரு வருடம் ஆகியிருத்தல் வேண்டும்.

3. வட்டார அளவிலான கூட்டமைப்பில் அனைத்து ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு இணைந்திருத்தல் வேண்டும்.

4. வட்டார அளவிலான கூட்டமைப்பு குறைந்தபட்சம் 12 செயற்குழு கூட்டத்தில் 100% அனைவரும் வருகை புரிந்திருத்தல் வேண்டும்.

5. செயற்குழு உறுப்பினர்களுக்கு தொடர்ச்சியாக 10 கூட்டம் நடத்துதல் வேண்டும்.

6. வட்டார அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள் பங்குத்தொகை செலுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.

7. செயற்குழு உறுப்பினர்கள் ஆண்டு சந்தா செலுத்தல் வேண்டும்.

8. பதிவேடுகள் பராமரிப்பு தரம் மற்றும் வெளிப்படைத்தன்மை உடையதாக இருத்தல் வேண்டும்.

9. வட்டார அளவிலான கூட்டமைப்பின் உறுப்பினர்களை வலுப்படுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருத்தல் வேண்டும்.

10. சமுதாய வளர்ச்சி செயல்பாடுகளில் பங்கேற்பு செய்தல் வேண்டும்.

சிறந்த கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் (Best VPRC) தேர்விக்குரிய நிபந்தனைகள்

1. கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் தர மதிப்பீட்டில் A or B Grade தர வரிசை பெற்றிருத்தல் வேண்டும்.

2. கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் விதிமுறைகளுக்குட்பட்டு அமைந்திருத்தல் வேண்டும்.

3. கடந்த ஆண்டு வருடங்களில் உறுப்பினர்களுக்கு 20 செயற்குழு கூட்டங்கள் நடத்தியிருத்தல் வேண்டும்.

4. கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களின் பதிவேடுகள் மற்றும் அறிக்கைகள் முறையாக பராமரித்தல் வேண்டும்.

5. செயற்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் 100% வருகை புரிதல் வேண்டும்.

6. வட்டாரத்தில் இலக்கு மக்களை கொண்டு புதிய குழுக்களை அமைத்தல் வேண்டும்.

7. நலிவுற்றோர்க்கான சிறப்பு நிதி பயன்பாட்டினை அளித்தல் வேண்டும்.

8. தொழில் திறன் பயிற்சி மற்றும் வாழ்வாதார பயிற்சியினை அளித்தல் வேண்டும்.

9. சமூக நல செயல்பாடுகளில் பங்கேற்றல் வேண்டும்.

சிறந்த நகர அளவிலான கூட்டமைப்புகள் (Best CLF) தேர்விக்குரிய நிபந்தனைகள்

1. நகர அளவிலான கூட்டமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டு குறைந்த பட்சம் ஒரு வருடம் ஆகியிருத்தல் வேண்டும்.

2. அனைத்து பகுதி அளவிலான கூட்டமைப்புகளும் நகர்ப்புற கூட்டமைப்பில் இணைந்திருத்தல் வேண்டும்.

3. கடந்த ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் 10 செயற்குழு கூட்டங்கள் நடைபெற்றிருத்தல் வேண்டும்.

4. நகர அளவிலான கூட்டமைப்புகள் தரமதிப்பீட்டில் A or B Grade தர வரிசை பெற்றிருத்தல் வேண்டும்.

5. நகர அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள் கடந்த ஆண்டில் 12 செயற்குழு கூட்டங்களில் சராசரி 90% வருகை புரிதல் வேண்டும்.

6. நகர அளவிலான கூட்டமைப்பு செயற்குழு உறுப்பினர்களில் 70% ஏழைகள் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

7. பகுதி அளவிலான கூட்டமைப்பில் இருந்து ஒருமுறை பங்குத்தொகை செலுத்தியிருத்தல் வேண்டும்.

8. அனைத்து பகுதி அளவிலான கூட்டமைப்புகளும் ஆண்டு சந்தா செலுத்துதல் வேண்டும்.

9. நகர அளவிலான கூட்டமைப்பின் கீழ் குறைந்தபட்சம் ஒரு நகர்ப்புற வாழ்வாதார மையம் அமைத்தல் வேண்டும்.

10. நகர அளவிலான கூட்டமைப்பில் பதிவேடுகள் பராமரித்தல் மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் இருத்தல் வேண்டும்.

11. சமூக நல செயல்பாடுகளில் பங்கேற்றல் வேண்டும்.

சிறந்த பகுதி அளவிலான கூட்டமைப்புகள் (Best ALF) தேர்விக்குரிய நிபந்தனைகள்

1. பகுதி அளவிலான கூட்டமைப்பு தர மதிப்பீட்டில் A or B Grade தர வரிசை பெற்றிருத்தல் வேண்டும்.

2. பகுதி அளவிலான கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டு குறைந்தபட்சம் 2 வருடங்கள் ஆகியிருத்தல் வேண்டும்.

3. அனைத்து சுய உதவிக் குழுக்களும் பகுதி அளவிலான கூட்டமைப்பில் இணைந்திருத்தல் வேண்டும்.

4. கடந்த 2 வருடங்களில் குறைந்தபட்சம் 20 பகுதி அளவிலான கூட்டமைப்பு கூட்டங்கள் நடைபெற்றிருத்தல் வேண்டும்.

5. கடந்த 2 வருடங்களில் 12 செயற்குழு கூட்டங்களில் உறுப்பினர்கள் 90% வருகை புரிதல் வேண்டும்.

6. செயற்குழு உறுப்பினர்களில் 70% ஏழை மக்களாக இருத்தல் வேண்டும்.

7. குறைந்தபட்சம் ஒரு சமூக வல்லுநர் பகுதி அளவிலான கூட்டமைப்பில் இருத்தல் வேண்டும்.

8. சுழற்சி நிதியை ஒரு முறையாவது சுய உதவிக்குழு உறுப்பினர்களின் பயன்பாட்டிற்கு வழங்குதல் வேண்டும்.

9. பகுதி அளவிலான கூட்டமைப்பில் 50% மகளிர் சுய உதவிக்குழுக்கள் வங்கிக்கடன் இணைப்பு பெற்றிருத்தல் வேண்டும்.

10. பகுதி அளவிலான கூட்டமைப்பில் பதிவேடுகள் பராமரித்தல் மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் இருத்தல் வேண்டும்.

11. சமூக நல செயல்பாடுகளில் பங்கேற்றல் வேண்டும்.

சிறந்த கிராமப்புற மற்றும் நகர்ப்புற மகளிர் சுய உதவிக்குழு, ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம், நகர்ப்புற அளவிலான கூட்டமைப்பு மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகள் மாநில மற்றும் மாவட்ட தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்படும்.

மேலும், மேற்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு தகுதியான கிராமப்புற மற்றும் நகர்ப்புற மகளிர் சுய உதவிக்குழு, ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்புச்சங்கம், நகர்ப்புற அளவிலான கூட்டமைப்பு மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகள் கிராம பகுதிக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், நகர்ப்புற பகுதிக்கு மகளிர் திட்ட அலுவலகத்திலும் விண்ணப்பங்களை பெற்று விருதிற்கான விபரங்களை முழுமையாக பூர்த்தி செய்து 15.04.2025-க்குள் மகளிர் திட்டம், மாவட்ட ஆட்சியரகம், 2வது தளம், கோரம்பள்ளம், தூத்துக்குடி-628101 என்ற முகவரிக்கு  அனுப்பிட வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0461 - 2341282 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்,   தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital

CSC Computer Education


New Shape Tailors



Thoothukudi Business Directory