» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பெருமாள் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு : கும்பாபிஷேகம் குறித்து தகவல்

ஞாயிறு 13, ஏப்ரல் 2025 12:08:50 PM (IST)



தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு வருகிற டிசம்பர் மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார் 

தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள உள்ள பழமையான ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவைகுண்டபதி பெருமாள்திருக் கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த திருக்கோயிலில் கடந்த 2008ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் கும்பாபிஷேக பணிகள் நடைபெறாமல் இருந்தன.

இந்நிலையில் பெருமாள்கோவிலுக்கு சுமார் 4கோடி செலவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு கடந்த 2013 ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது சில தவிர்க்க முடியாத காரணத்தினால் கடந்த 10 ஆண்டுகளாக தாமதமாக நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் முயற்சியால் மீண்டும் கும்பாபிஷேக பணிகள் தொடங்கியது.

இதில் முதல் கட்டமாககல் மண்டப திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.  இதில் 35 ஆயிரம் சதுரடி பரப்பளவில் கல் மண்டபத்தில் 63 கல் தூண்களுடன் பாரம்பரிய சாஸ்திர முறைப்படி பணிகள் நடைபெறுகிறது. மேலும் கோவிலின் இடது புறத்தில் நரசிம்மர் ஆஞ்சநேயர் ஸ்ரீதேவி பூதேவி சன்னதி தனித்தனியாக கட்டும் பணிகளும் நடந்து வருகிறது

இந்தப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அவர்களுக்கு சிகப்பு கம்பளம் விரித்து கோவிலின் பிரதான பட்டர்கள் செல்வம் மற்றும் வைகுண்ட ராமன் ஆகியோர் தலைமையில் பூரண கும்ப மரியாதை கொடுக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பின்னர் சாமி தரிசனம் செய்த அமைச்சர்கள் சேகர்பாபு, கீதா ஜீவன் ஆகியோர் கோவில் பிரகாரத்தில் நடந்து வரும் கல் மண்டபம் அமைக்கும் பணிகளை பார்வையை விட்டு ஆய்வு செய்தனர். பின்னர் நடைபெறும் திருப்பணிக் குறித்து அதிகாரியிடம் விளக்கம் கேட்டனர். தற்போது ரூபாய் 4 கோடியில் நடந்து வரும் திருப்பணிகளுக்கு மேலும் 2 கோடி செலவாகும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அதற்கு அறிக்கை தயார் செய்து தனக்கு அனுப்புமாறு அமைச்சர் சேகர்பாபு கேட்டுக்கொண்டார். இதனால் ரூபாய் 6 கோடியில் செலவில் திருப்பணிகள் நடக்கப்பட உள்ளது

பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம்கூறியதாவது: தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் கடந்த 2013 ஆம் ஆண்டு கும்பாபிஷேக பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் பணிகள் நடைபெறாமல் இருந்தது. தற்போது அமைச்சர் கீதா ஜீவன் எடுத்த நடவடிக்கையால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் நேரில் வந்து பார்வையிட்டு திருப்பணி பணிகளை விரைவில் செய்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். 

அதன்படி ரூபாய் 4 கோடி செலவில் திருப்பணிகள் நடந்து வருகிறது. தற்போது மேலும் 2 கோடி கேட்டு உள்ளார்கள். இதை உடனடியாக கொடுப்பதற்கு இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு உண்டு உள்ளேன். கோவிலில் இருந்து பணம் எடுக்க முடிவட்டால் இந்து அறநிலைத்துறை பொது நிதியிலிருந்து பணத்தை எடுத்து திருப்பணிகள் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். 

திருப்பணிகள் நடைபெற்று வருகிற நடப்பாண்டில் டிசம்பர் மாதம் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கும்பாபிஷே பணிகளில் உபயதாரர்கள் காலதாமதம் செய்ததால் தான் திருப்பணிகள் நடப்பதற்கு காலம் கடந்து விட்டது தற்போது பணிகள் விரைந்து முடிக்க வேகமாக நடந்து வருகிறது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார் 

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை இயக்குனர் ஸ்ரீதர், தூத்துக்குடி மாவட்ட இணை இயக்குனர் அன்புமணி, சிவன் கோவில் மற்றும் பெருமாள் கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், அறங்காவலர்கள் கந்தசாமி பிஎஸ்கே ஆறுமுகம், பால சங்கர், மந்திரமூர்த்தி, முருகேஸ்வரி, ஜெயா பால், ஜெயலட்சுமி, சாந்தி, தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செல்வ சித்ரா, அறிவழகன், அறங்காவலர்கள் மகாராஜன், பாலகுருசாமி, மாநகர செயலாளர் எஸ்ஆர் ஆனந்த சேகரன், கலை இலக்கிய அணி செயலாளர் ஜீவன் ஜேக்கப், மாநகராட்சி கவுன்சிலர் சுரேஷ்குமார், மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் அருண் குமார், முன்னாள் கவுன்சிலர் ஜெய்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital




New Shape Tailors




Thoothukudi Business Directory