» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் லாரி மீது வேன் மோதல்: குழந்தைகள், பெண்கள் உட்பட 18 பேர் காயம்!

வெள்ளி 25, ஏப்ரல் 2025 5:00:16 PM (IST)



தூத்துக்குடியில் கண்டெய்னர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 18 பேர் படுகாயம் அடைந்தனர். 

மதுரை பழங்காநத்தம் காளியப்ப பிள்ளை நாடார் தெருவைச் சேர்ந்தவர் அழகர்சாமி (52), இவர் தனது குடும்பத்தினர்கள் 17 பேருடன் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பேரனுக்கு மொட்டை போடுவதற்காக ஒரு வேனில் வந்தனர். வேனை விருதுநகர் காந்தி நகரை சேர்ந்த பரமசிவம் மகன் சரவணகுமார் (52) என்பவர் டிரைவராக ஓட்டி வந்தார்.

சுவாமி தரிசனம் செய்த பின்னர் இன்று மதியம் மீண்டும் மதுரைக்கு செல்வதற்காக வேனில் புறப்பட்டு சென்றனர். தூத்துக்குடி புதிய துறைமுகம் -மதுரை பைபாஸ் ரோடு, ஸ்டெர்லைட் தொழிற்சாலை அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் வேனில் இருந்த 4 குழந்தைகள், 8 பெண்கள், டிரைவர் உட்பட 18 பேர் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory