» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோயிலில் தேரோட்டம்: அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

ஞாயிறு 13, ஏப்ரல் 2025 2:10:54 PM (IST)



கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோயில் தேரோட்டத்தினை அமைச்சர்கள் கீதாஜீவன், சேகர்பாபு, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவநாதர் சுவாமி கோவில் பங்குனி திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழா நாட்களில் ஒவ்வொரு மண்டகப்படிதாரர்கள் சார்பில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்கள், அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.

விழாவின் 9-ஆம் நாளான இன்று தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை நடைபெற்றது. காலை 7.45 மணிக்கு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையை தொடர்ந்து, காலை சுவாமி- அம்பாள் திருத்தேரில் எழுந்தருளினர். காலை 10 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. வானவேடிக்கை, மேள தாளங்கள் முழங்க முதலில் சுவாமி தேரும், அதைத் தொடர்ந்து அம்பாள் தேரும் புறப்பட்டது. நான்கு ரத வீதிகளில் சுவாமி- அம்பாள் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

திருக்கோயில் தேரோட்டத்தினை சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.  விழாவில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ, துரை வைகோ எம்.பி, நகர்மன்ற தலைவர் கருணாநிதி, நகராட்சி ஆணையர் கமலா, கம்மவார் சங்கத் தலைவர் ஹரி பாலகன்,  உட்பட பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


முதலுதவி மருத்துவ மையம் திறப்பு

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக முதலுதவி மருத்துவ மையம் திறப்பு விழா நடந்தது. தமிழக மீன்வளம். மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். 

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வி வரவேற்றார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) அறநிலையத்துறை பழனி, மாவட்ட கலெக்டர் இளம் பகவத், இணை ஆணையர் அன்புமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ மைய டாக்டர்கள், செவிலியர்களுக்குபணி நியமன ஆணையை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.

இந்த மருத்துவ மையத்தில் முதலுதவி மற்றும் அடிப்படை சிகிச்சை மேற்கொள்வதற்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், இரத்த அழுத்தமானி, படுக்கைகள், உயிர்காக்கும் மருந்துகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. தற்போது வரை 19 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, இதுவரை 7,20,121 நபர்கள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.

இந்நிகழ்ச்சிகளில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் க.மகாலட்சுமி, வட்டாட்சியர்கள் சரவணபெருமாள் (கோவில்பட்டி), பாலசுந்தரம் (திருச்செந்தூர்) உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

New Shape Tailors

Arputham Hospital









Thoothukudi Business Directory