» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் போப் பிரான்சிஸ் உருவ படத்திற்கு அஞ்சலி!
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:55:16 PM (IST)

தூத்துக்குடியில் போப் பிரான்சிஸ் உருவ படத்திற்கு ஆயர் ஸ்டீபன் ஆந்தோணி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் மறைந்தார். அவருக்கு வயது 88. போப் பிரான்சிஸின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. போப் மறைவை முன்னிட்டு தூத்துக்குடி மறைமாவட்டம் சாா்பில் அனைத்து தேவாலயங்களிலும் மாலை 4 மணிக்கு துக்க மணி அடிக்கப்பட்டு, போப் ஆண்டவரின் மறைவு குறித்து அறிவிக்கப்பட்டு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து தூத்துக்குடி மறை மாவட்ட ஆயா் இல்லத்தில் போப் ஆண்டவா் திருவுருவப் படத்திற்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் ஆண்டனி தலைமையில் மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாள் மறை மாவட்ட ஆயா் இவான் அம்புரோஸ் மற்றும் பங்குத்தந்தைகள், மறை மாவட்ட முதன்மை செயலா் அந்தோணி ஜெகதீசன் மறை மாவட்ட பொருளாளா் பிரதீப் மற்றும் ஆயா் இல்ல தந்தையா்கள் அஞ்சலி செலுத்தினா்.
ஆயா் ஸ்டீபன் அந்தோணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: எளிமை, தாழ்மை, ஏழைகளிடம் அன்பு உலகம் சுற்றுப்புறத்தைக் காத்தல் ஆகியன போப் ஆண்டவரின் மையச் செயல்களாக இருந்தன. அவருடைய பிரிவால் துயருறும் அனைத்து கிறிஸ்தவா்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











அ.ஐயப்பனApr 22, 2025 - 03:42:19 PM | Posted IP 162.1*****