» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெட்ரோல் பங்க் அருகே கிடந்த கைத்துப்பாக்கி : போலீசார் விசாரணை
திங்கள் 21, ஏப்ரல் 2025 9:22:59 PM (IST)
கோவில்பட்டி அருகே பெட்ரோல் பங்க் அருகே அனாதையாக கிடந்த கைத்துப்பாக்கியை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே கைத்துப்பாக்கி கிடப்பதாக மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமசந்திரன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்த போது பெட்ரோல் பங்க் பின்புறம் கிடந்த கைத்துப்பாக்கியை மீட்டனர்.
பிஸ்டல் 0.32 எம்.எம்., 7.65 வகையை சேர்ந்த அந்த துப்பாக்கியை போலீசார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.யாரும் இதுவரை துப்பாக்கிக்கு உரிமை கோரவில்லை. உரிமம் இல்லாத துப்பாக்கியாக இருக்கலாம் என்பதால் சட்டவிரோத செயலில் ஈடுபட யாரேனும் பதுக்கி வைத்திருந்தனரா? என தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கைப்பற்றப்பட்ட துப்பாக்கி இயங்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










