» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாலையில் நடந்து சென்றபோது கார் மோதி வாலிபர் பலி
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 9:18:00 AM (IST)
செய்துங்கநல்லூரில் சாலையில் நடந்து சென்றபோது கார் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் சந்தையடியூர் தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் முத்து பெருமாள் (32). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் பங்குனி உத்திர திருவிழாவிற்காக செய்துங்கநல்லூரில் உள்ள சுந்தரபாண்டிய சாஸ்தா கோவிலுக்கு குடும்பத்துடன் முத்துபெருமாள் சென்றார்.
இரவில் கோவிலில் இருந்து முத்துபெருமாள் மட்டும் ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ரயில்வே கேட் அருகில் சென்ற போது அந்த வழியாக வந்த கார் ஒன்று முத்துபெருமாள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த முத்துபெருமாளை மீட்டு சிகிச்சைக்காக பாளை., அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐஏஎஸ் தேர்வில் விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவன் வெற்றி!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 9:46:04 PM (IST)

தூத்துக்குடியில் தீக்குளித்த தனியார் நிறுவன ஊழியர் சாவு : போலீஸ் விசாரணை
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:35:24 PM (IST)

மருத்துவ சிகிச்சை தரவரிசை பட்டியலில் தூத்துக்குடி மாநகராட்சி புதிய சாதனை!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:29:28 PM (IST)

நாசரேத் அருகே கிரிக்கெட் போட்டி: பாட்டக்கரை அணி கோப்பையை வென்றது!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:17:11 PM (IST)

தூத்துக்குடியில் இடி மின்னலுடன் திடீர் மழை : மின்னல் தாக்கியதில் பசு மாடு உயிரிழப்பு
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:10:39 PM (IST)

மேலச்செவல் டிடிடிஏ பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டிடம்: ராபர்ட் புரூஸ் எம்.பி. திறந்து வைத்தார்.
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:03:21 PM (IST)
