» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மருத்துவ சிகிச்சை தரவரிசை பட்டியலில் தூத்துக்குடி மாநகராட்சி புதிய சாதனை!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:29:28 PM (IST)
தமிழ்நாட்டில் மருத்துவ சிகிச்சை தரவரிசை பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடித்து தூத்துக்குடி மாநகராட்சி சாதனை படைத்துள்ளது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் மூலம் பொதுமக்களுக்கு கிடைக்கும் சுகாதார சேவைகள், தொற்றா நோய்களுக்கான சேவைகள், ஆய்வக பரிசோதனை சேவைகள், தாய் மற்றும் சேய் நல சேவைகள் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தர வரிசைப்படுத்தப்படுகின்றன.
தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 404 நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள சேவைகளின் அடிப்படையில் 2025 மார்ச் மாதம் வெளியிடப்பட்டுள்ள தரவரிசை (Rank) பட்டியலில் கீழ்கண்டவாறு இடத்தை பெற்றுள்ளன.
தரவரிசை பட்டியல்
1.பாத்திமா நகர் 1
2. கணேஷ்நகர் 2
3. முள்ளக்காடு 4
4. தருவைரோடு 5
5. மடத்தூர் 6
இதனைத் தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்தமைக்காக மேற்கண்ட நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவ அலுவலர், செவிலியர், பகுதி சுகாதார செவிலியர்கள், நகர சுகாதார செவிலியர், ஆய்வக நுட்புநர்கள், மருந்தாளுநர்கள் அனைவருக்கும் மாண்புமிகு மேயர், ஆணையர், மாநகர்நல அலுவலர் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர் ஆகியோர் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










