» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் குருத்தோலை ஞாயிறு பவனி: கிறிஸ்தவர்கள் திரளானோர் பங்கேற்பு
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 8:45:37 AM (IST)

தூத்துக்குடியில் குறுத்தோலை ஞாயிறு பவனி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் 40 நாள் தவக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தவக்காலத்தின் முடிவில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும். தவக்காலத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். அதன் பகுதியாக இன்று குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பழைமை வாய்ந்த திரு இருதய ஆலயத்தில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அண்டனி தலைமையில் குறுத்தோலை பவனி நடந்தது. இதேபோன்று உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்திலும் பங்குத்தந்தை ஸ்டார்வின் தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு கையில் குறுத்தோலைகளை ஏந்தியபடி ஓசன்னா பாடலை பாடியபடி வீதிகளில் வலம் வந்தனர். பின்னர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஆன்டனி ப்ரூனோ, மறை மாவட்ட செயலர் ஜெகதீசன் தலைமையில் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பங்குமக்கள் கலந்து கொண்டனர். இதைப்போல் தூத்துக்குடி மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள உள்ள பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி நடைபெற்றது. தவக்காலத்தின் அடுத்த முக்கிய நிகழ்வாக வரும் 18ம் தேதி வெள்ளிக்கிழமை புனித வெள்ளியும், 20 ம் தேதி ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திறமைகளை மேம்படுத்துவதே மாணவர்களின் தலையாய கடமை: ஆட்சியர் க.இளம்பகவத்
புதன் 23, ஏப்ரல் 2025 4:09:45 PM (IST)

அஞ்சலகங்களில் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பும் சேவை : ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு!
புதன் 23, ஏப்ரல் 2025 3:27:02 PM (IST)

மே-20 அகில இந்திய பொதுவேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வோம் : தொழிற்சங்கங்கள் முடிவு
புதன் 23, ஏப்ரல் 2025 3:20:31 PM (IST)

தூத்துக்குடியில் ஜாக்டோ-ஜியோ பேரணி: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தல்
புதன் 23, ஏப்ரல் 2025 3:12:37 PM (IST)

வெப்ப அலை கணக்கிடும் முறையில் மாற்றம் வேண்டும் : கனிமொழி எம்பி வலியுறுத்தல்!
புதன் 23, ஏப்ரல் 2025 12:34:40 PM (IST)

குடிநீர் குழாய் அமைக்கும் பணி: மேயர் ஆய்வு
புதன் 23, ஏப்ரல் 2025 12:11:51 PM (IST)
