» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அஞ்சலகங்களில் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பும் சேவை : ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு!
புதன் 23, ஏப்ரல் 2025 3:27:02 PM (IST)
தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் வெளிநாடுகளுக்கு பார்சல்கள் அனுப்பும் சேவையை ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தின் கீழ் உள்ள தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில், வெளிநாட்டு ஏற்றுமதியாளர்களுக்கான அஞ்சலக ஏற்றுமதி மையம் (DAK GHAR NIRYAT KENDRA) 2022ம் ஆண்டு துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருவதுடன் ஏற்றுமதியாளர்களிடம் சிறந்த வரவேற்பையும் பெற்றுள்ளது.
"அஞ்சலக ஏற்றுமதி மையம்” ஏற்றுமதியாளர்களின் அனைத்து தேவைகளுக்குமான ஒரே இடமாக செயல்படுகிறது. இந்த மையங்கள் ஏற்றுமதிதொடர்பான சேவைகளை வழங்குவதன் மூலம், வணிகங்களின் செயல்திறனை அதிகரிக்கவும், செலவுகளைக் குறைக்கவும் அவர்களின் ஏற்றுமதி முயற்சிகளில் சுமூகமான செயல்பாடுகளை உறுதிப்படுத்தவும் உதவுகின்றன.
வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்ப விரும்பும் ஏற்றுமதியாளர்கள் தாங்கள் ஏற்றுமதி செய்யும் பார்சல்களின் விபரங்களைத் தாங்களே எளிமையான முறையில் ஆன்லைனில் உள்ளீடு செய்த பின் தூத்துக்குடி தலைமை அஞ்சலகம் மூலமாக, ஏற்றுமதி பார்சல்களை வெளிநாடுகளுக்கு அனுப்பலாம் . மேலும் புக்கிங் குறித்த விவரங்களை ஆன்லைனிலேயே Foreign Post அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும் வசதியும் இதில் அடங்கும்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி பார்சல்கள் அனுப்பும் இந்த சேவையை ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பொறுப்பு வடக் ரவிராஜ் ஹரிஷ்சந்திரா கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் விபரங்களுக்கு வணிக நிர்வாக அலுவலரை 9841875710 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










