» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஜாக்டோ-ஜியோ பேரணி: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தல்

புதன் 23, ஏப்ரல் 2025 3:12:37 PM (IST)



தூத்துக்குடியில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் நடைபெற்ற பேரணியை முதுநிலைபட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் முஜிபுர் தொடங்கி வைத்தார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், உடற்கல்வி இயக்குனர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும். 

தொடக்க கல்வித் துறையில் பணிபுரியும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, துாத்துக்குடியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்ங்களின் கூட் டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் பேரணி நடந்தது.

தூத்துக்குடியில் உள்ள பாளை., ரோடு அம்பேத்கர் சிலை முன்பிருந்து, சிதம்பரநகர் பஸ் ஸ்டாண்ட் வரை பேரணி நடந்தது. பேரணியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உமா தேவி, கலை உடையார் தலைமை வகித்தனர் பேரணியை முது நிலைபட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் முஜிபுர் துவக்கி வைத்தார். இதில் கோரிக்கைகளை விளக்கி, அரசு ஊழியர் சங்க மாநில துணைப்பொதுச் செயலாளர் வெங்கடேசன், மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் முருகன் ஆகியோர் பேசினர். மாவட்ட தலைவர் ஆனந்தராஜ் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory