» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மீன், இறால் நோய்களைக் கண்டறிதல் பயிற்சி : தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி அழைப்பு!

திங்கள் 7, ஏப்ரல் 2025 4:47:05 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் மீன் மற்றும் இறால் நோய்களைக் கண்டறிதல் மற்றும் மேலாண்மை செய்தல் குறித்த ஒரு நாள் வளாக வழியிலான பயிற்சி வருகிற 16ஆம் தேதி நடைபெற உள்ளது. 

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மீன் மற்றும் இறால் நோய்களைக் கண்டறிதல் மற்றும் மேலாண்மை செய்தல்’பற்றிய ஒரு நாள் வளாக வழியிலான பயிற்சி 16.04.2025 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வழங்கபட உள்ளது.

இப்பயிற்சியில் மீன் நோய்கள் மற்றும் அவற்றின் மேலாண்மை, இறால் நோய்கள் மற்றும் அவற்றின் மேலாண்மை, நோய் பரவலைத் தடுப்பதற்கான நீர் தர மேலாண்மை மற்றும் குளம்/பண்ணை தயாரிப்பு மற்றும் மேலாண்மை முறைகள் ஆகிய தலைப்புகளில் தொழில்நுட்ப வகுப்பு பயிற்சி அளிக்கப்படும்.

இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அனைவரும் ரூ.300 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சியாளர்கள் நேரடியாகவோ அல்லது கல்லூரி வங்கி கணக்கு வாயிலாகவோ பணத்தை செலுத்தலாம். 

பயிற்சியின் முடிவில் பயிற்சியாளர்களின் சான்றிதழ் மற்றும் பயிற்சி கையேடு வழங்கப்படும். இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள தொழில் முனைவோர், மாணவர்கள் மற்றும் இதர நபர்கள் அனைவரும் 15.04.2025 மாலை 5.00 மணிக்குள் அலைபேசி மூலமாக அல்லது கீழ்க்கண்ட முகவரியில் தொடர்புகொண்டு கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும். 

பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

ப. சிவசங்கர் உதவி பேராசிரியர்,
மீன் நோயியல் மற்றும் சுகாதார மேலாண்மைத் துறை,
மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தூத்துக்குடி - 628 008
அலை பேசி எண் (9842437541, 7904676472)
மின் அஞ்சல்: shivsankar@tnfu.ac.in


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

New Shape Tailors








Arputham Hospital



Thoothukudi Business Directory