» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழகத்தில் 234 தொகுதியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்: நயினார் நாகேந்திரன் பேட்டி
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 7:37:45 PM (IST)
தமிழகத்தில் 234 தொகுதியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "திமுகவிற்கு நான்கு ஆண்டுகளில் மிகப்பெரிய எதிர்ப்பலை கிளம்பியுள்ளது.
தொகுதி மறு சீரமைப்புக்கு எதிராக மக்கள் போராட வேண்டும் என்று திமுக அமைச்சர்கள் கூறுகின்றனர். தொகுதி மறு சீரமைப்பு குறித்து பிரதமரோ, உள்துறை அமைச்சரோ ஏதாவது தெரிவித்தாரா? இவர்கள் திரும்பத் திரும்ப இதே கருத்தை வலியுறுத்தியதால் மத்திய அமைச்சர் அமித்ஷா விகிதாச்சார அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்படும் என்றும் இதனால் தமிழகத்தில் பாதிப்பு இருக்காது என்று தெரிவித்தார்.
அமைச்சர் பொன்முடி பேசியது அநாகரீகமான செயல். திமுக அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்தனர். பிறகு தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் என்று தெரிவிக்கின்றனர். யார் இந்த தகுதி வாய்ந்த குடும்ப பெண்கள்? மின்சார கட்டணம் 300 மடங்கு உயர்ந்துள்ளது. சொத்து வரி உயர்ந்துள்ளது. பால் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது. மக்கள் மனநிலை மாறியுள்ளது தமிழகத்தில் 234 தொகுதியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் பகுதியில் புனித வெள்ளி பிரார்த்தனை: சபை மக்கள் திரளானோர் பங்கேற்பு.
வெள்ளி 18, ஏப்ரல் 2025 8:35:03 PM (IST)

பெண்ணிடம் அத்துமீறியவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 5:13:27 PM (IST)

ரேஷன் கடைகளில் புளுடூத் இணைப்பை நீக்க வேண்டும் : விற்பனையாளர்கள் கோரிக்கை!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 4:50:08 PM (IST)

திருச்செந்தூரில் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பை தடுக்கும் பணி; அமைச்சர் சேகர்பாபு தகவல்
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:19:07 PM (IST)

திமுக இளைஞர் அணி சமூகவலைதள பயிற்சிக் கூட்டம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:14:34 PM (IST)

பனிமய மாதா ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 11:41:31 AM (IST)

சாமான்யன்Apr 13, 2025 - 08:43:23 PM | Posted IP 162.1*****