» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் தேர் நிழற்கூடம் அமைக்க கால்கோள் விழா!

புதன் 23, ஏப்ரல் 2025 8:08:51 PM (IST)



திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் தேர் நிழற்கூடம் அமைக்க கால்கோள் விழா நடைபெற்றது. 

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப் பதியில் தினத்தந்தி குழும தலைவர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் நிதி உதவியுடன் தேர் கூடம், இந்திர வாகனம் நிறுத்துவதற்கான நிழற்கூடம் மற்றும் கூட்ட அரங்கம் அமைக்கும் பணிக்கான கால்கோல் விழா இன்று பதி வளாகத்தில் நடைபெற்றது. அய்யா வைகுண்டர் அவதார பதி தலைவர் வள்ளியூர் எஸ். தர்மர் புதிய நிழற்கூடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். இந்தநிழ்ச்சிக்கு செயலாளர் பொன்னுதுரை முன்னிலை வகித்தார்.முன்னதாக கோவிலில் சிறப்பு பணிவிடைகள் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் அய்யா வைகுண்டர் அவதார பதி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சந்திர சேகரன், ஓய்வு பெற்ற கால்நடை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், பொருளாளர் கோபால் நாடார், துணை தலைவர் அய்யா பழம், இணைத் தலைவர்கள் செல்வின்ஆசிரியர், பேராசிரியர் விஜயகுமார், பால்சாமி, இணை செயலாளர்கள் வரதராஜ பெருமாள், தங்க கிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், சுதேசன், திருநெல்வேலி நாடார் உறவின் முறை சங்க தலைவர் அசோகன், திருநெல்வேலி மாவட்ட டாக்டர் சின்னய்யா நற்பணி மன்ற துணை செயலாளர் அய்யாசாமி, அவதார பதி நிர்வாக குழு உறுப்பினர்கள் கேடிஎம். செல்வக்குமார், பாலகிருஷ்ணன், துவையல் தவசி செல்வகுமார், சுப்பிரமணியன், பாலகிருஷ்ணன், உறுப்பினர்கள் பால்ராஜ், அழகேசன், ஒப்பந்ததாரர் சேகர், வேல்முருகன், பொறியாளர் சோமன்,அசோக்குமார் ஆதித்தன், ராஜன் ஆதித்தன், ஜெயேந்திர ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory