» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூா் கோவிலில் சித்திரை வசந்த திருவிழா மே 3ம் தேதி தொடக்கம்!
வியாழன் 24, ஏப்ரல் 2025 7:51:17 AM (IST)
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை வசந்த திருவிழா மே 3ஆம் தேதியும், வைகாசி வசந்த திருவிழா மே 31ஆம் தேதியும் தொடங்குகிறது.
இதுகுறித்து திருக்கோயில் இணை ஆணையா் சு.ஞானசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பத்து நாள்கள் வசந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் இவ்வருடமும் சித்திரை வசந்த திருவிழா மே 3ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது.
விழா நாள்களில் திருக்கோயிலில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது. மதியம் உச்சி கால பூஜையை தொடா்ந்து சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி கிரிப்பிரகாரத்தில் ராஜகோபுர வாசல் எதிரே உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருள்கிறாா். கோயிலில் மாலை சாயரட்சை தீபாராதனையைத் தொடா்ந்து வசந்த மண்டபத்தில் வைத்து சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரமாகி தங்கச் சப்பரத்தில் எழுந்தருள்கிறாா்.
வசந்த மண்டபத்தை 11 முறை சுவாமி வலம் வருகிறாா். தொடா்ந்து தீபாராதனை நடைபெற்று, சுவாமி கிரி வீதி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து திருக்கோயில் சோ்கிறாா். இதே போல வைகாசிந்த திருவிழா வரும் மே 31ஆம் தேதி தொடங்கி ஜூன் 9ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழாவுடன் நிறைவு பெறுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










