» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: 5மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 6:55:27 PM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சுமார் 5மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பரிகார பூஜைகள் செய்து சிறப்பு வழிபாடு செய்து செல்வது வழக்கம். அந்த வகையில் பவுர்ணமி நாளான நேற்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன்கள் மற்றும் பஸ்கள் மூலம் காலையில் இருந்தே கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று இரவு முழுவதும் கடற்கரையில் தங்கி நிலாச்சோறு சாப்பிட்டு வழிபாடு செய்தனர். சில பெண்கள் கடற்கரையில் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
பவுர்ணமி சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு நேற்று இரவு முழுவதும் கடற்கரையில் தங்கிய பக்தர்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் காலையில் இருந்தே கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். விடுமுறை நாளான இன்று கோவில் நடை அதிகாலை 4மணிக்கு திறக்கப்பட்டது. 4.30மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சி கால அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் போக்ஸோவில் கைது!
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 9:39:50 AM (IST)

பெண் தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை!
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 9:38:27 AM (IST)

வியாபாரியைத் தாக்கி மிரட்டல்: 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 9:32:36 AM (IST)

தனியார் நிறுவனத்தில் ரூ.3 லட்சம் திருட்டு: வடமாநில வாலிபர் கைது!
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 9:29:15 AM (IST)

தீயணைப்பு துறை சார்பில் தீத்தொண்டு வாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 9:16:30 AM (IST)

உணவுக்கழக தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் : ஐஎன்டியுசி அமைப்புச் செயலாளர் பேட்டி
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 9:07:29 AM (IST)
