» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நிழல் இல்லா நாள் செயல் விளக்க பயிற்சி

ஞாயிறு 13, ஏப்ரல் 2025 6:46:06 PM (IST)



கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அஸ்ட்ரோ கிளப் சார்பில் நிழல் இல்லா நேரத்தை கண்டறியும் செயல் விளக்க பயிற்சி நடந்தது.

தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் மாவட்டம் முழுவதும் அஸ்ட்ரோ கிளப்புகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் பள்ளி கல்லூரி மாணவர்கள் பொது மக்களிடம் வானவியல் மற்றும் அறிவியல் கருத்துக்களை பரப்புரை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நிழல் இல்லா நாள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

நிழல் இல்லா நாள் என்பது அரிய வான் நிகழ்வாகும்.நண்பகலில் சூரியன் நேரடியாக தலைக்கு மேல் இருக்கும் போது வருடத்திற்கு இரண்டு முறை நிகழும் நிகழ்வாகும். 23.5டிகிரி வடக்கு அட்சரேகைக்கும் 23.5டிகிரி தெற்கு அட்சரேகைக்கும் இடைப்பட்ட கடகரேகைக்கும் மகரரேகைக்கும் இடைப்பட்ட இடங்களில் நிகழ்கிறது. தமிழகத்தில் கன்னியாகுமரியில் ஏப்ரல் மாதம் 10ம்தேதி தொடங்கி  சென்னையில் 24ம் தேதி நிழல் இல்லா நாளாகும். 

ஏப்.13ம்தேதி கோவில்பட்டி, சங்கரன்கோவில், ராமேஸ்வரம், ராமநாதபுரம். ஏப்.14ம் தேதி கம்பம், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், பரமக்குடி ஆகிய ஊர்களில் நிழல் இல்லா நாளாகும். இதனை முன்னிட்டு கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவிகள்  வட்டமாக நின்றும், ஒரு மேஜையில் வட்ட வடிவில் உள்ள பொருளின் மையப்பகுதியில் ஒரு குச்சியை ஊன்றி நிழலை அளவு செய்தனர்.இதில்  சரியாக 12:20மணிக்கு  நிழல் இல்லா நேரத்தை கண்டறிந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்து முருகன் தலைமை வகித்தார். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வேதியியல் ஆசிரியை அகிலாராணி முன்னிலை வகித்தார். பள்ளி இயற்பியல் ஆசிரியை கமலா ராணி அனைவரையும் வரவேற்றார்.

டாஸ் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி கலந்து கொண்டு நிழல் இல்லா நாளில் நிழல் இல்லா நேரத்தை கண்டறிவது செயல் விளக்கத்துடன் பயிற்சி அளித்தார்.இதில் ஆசிரியர்கள் உமா மகேஸ்வரி, சகுந்தலா, மதன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு நிழல் இல்லா நேரத்தை கண்டறிந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டியில் உலக புத்தக தினவிழா!

வியாழன் 24, ஏப்ரல் 2025 11:17:30 AM (IST)

Sponsored Ads


New Shape Tailors


Arputham Hospital




CSC Computer Education




Thoothukudi Business Directory