» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் உலக புத்தக தினவிழா!
வியாழன் 24, ஏப்ரல் 2025 11:17:30 AM (IST)

கோவில்பட்டியில் உலக புத்தக தினவிழா நடைபெற்றது.
"இல்லம் தோறும் நூலகம்" என்பது ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என்ற குறிக்கோளைக் குறிக்கிறது. இது ஒரு வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், வாசிப்பால் பயனடையவும் உதவுகிறது. தமிழக அரசு, வீடுதோறும் நூலகங்கள் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருகிறது.
உலக புத்தக தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கோவில்பட்டிக் கிளைச் செயலாளர் பிரபுஜாய் இல்லத்தில் நூலகம் திறப்பு விழா நடந்தது. பாலபுரஸ்கார் விருதாளர் எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் 1800க்கும் மேற்பட்ட நூல்கள் அடங்கிய நூலகத்தைத் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து புத்தகத் திறனாய்வு நிகழ்வு நடைபெற்றது.
இதில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட மரப்பாச்சி சொன்ன ரகசியம், விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள், ஆதனின் பொம்மை, அம்மாவிற்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை, தன்வியின் பிறந்த நாள், சரஸ்வதிக்கு என்னாச்சு, 1650 முன்னொரு காலத்தில், ஒற்றைச் சிறகு ஓவியா, துணிச்சல் காரி, பிரேமாவின் புத்தகங்கள் மற்றும் போன்சாய் புத்தகங்களை பல்வேறு ஆசிரியர்களும், எழுத்தாளர்களும் திறனாய்வு செய்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டனர். கிளைத் தலைவர் ஆசிரியர் மணிமொழிநங்கை தலைமை தாங்கினார்.
எழுத்தாளர்கள் ராஜலட்சுமி நாராயணசாமி, தங்கதுரையரசி, பொன்னுராஜ், வரகவி முருகேசன், ராஜேஸ் சங்கரன் பிள்ளை, விநாயக சுந்தரி, ஆசிரியர்கள் சுரேஷ்குமார், தினகரன், ஜெனிபர், ஞான சங்கரி, ராஜா, மாரிச்சாமி, கலைவாணர் சந்திரசேகர், கோபாலகிருஷ்ணன், கவிதா, சிறார்கள் கவின், தருண், ஹரிணி, அய்யனார் உள்ளிட்ட திரளானோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். இல்ல நூலகத்திற்கு பலர் புத்தகங்களைப் பரிசாக வழங்கினர். முன்னதாக கிளைச் செயலாளர் பிரபு ஜாய் வரவேற்புரை நல்கினார். நிறைவாக கிளைப் பொருளாளர் ஆசிரியர் கண்ணகி நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










