» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் கருட சேவை : திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:58:34 AM (IST)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவில் பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவை நேற்று இரவு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து காண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நவதிருப்பதி கோவில்களில் 9-வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலையும், மாலையும் சுவாமி பொலிந்து நின்றபிரான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவை நேற்று இரவு நடந்தது. முன்னதாக, காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, காலை 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு திருமஞ்சனம், நித்தியல், கோஷ்டி நடைபெற்றது.
காலை 8 மணிக்கு உற்சவர் பொலிந்து நின்றபிரான் மாட வீதிகளில் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 11 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை, நாலாயிர திவ்யப்பிரபந்தம், சாத்துமுறை நடந்தது. மாலை 5 மணிக்கு சாயரட்சை, 5.30 மணிக்கு சுவாமி மற்றும் நம்மாழ்வார் வாகன குறட்டிற்கு எழுந்தருளினர்.
இரவு 7.30 மணியளவில் சுவாமி பொலிந்து நின்ற பிரான் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். பின்னர் திருவீதி உலா நடந்தது. இந்நிகழ்ச்சியில் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிகர நிகழ்வான தேரோட்டம் வருகிற 10-ந்தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் தீர்த்தவாரி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் ரகளை: 4பேர் கைது
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 12:17:54 PM (IST)

தூத்துக்குடி பெருமாள் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு : கும்பாபிஷேகம் குறித்து தகவல்
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 12:08:50 PM (IST)

நுகர்வோருக்கு ரூ.25.35 இலட்சம் நஷ்ட ஈடு: நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 9:32:37 AM (IST)

சாலையில் நடந்து சென்றபோது கார் மோதி வாலிபர் பலி
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 9:18:00 AM (IST)

தூத்துக்குடியில் சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் திடீர் ஆய்வு!
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 8:56:28 AM (IST)

தூத்துக்குடியில் குருத்தோலை ஞாயிறு பவனி: கிறிஸ்தவர்கள் திரளானோர் பங்கேற்பு
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 8:45:37 AM (IST)
