» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூா் கோவிலில் திருக்கல்யாண வைபவம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

ஞாயிறு 13, ஏப்ரல் 2025 8:33:32 AM (IST)



திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகர்- வள்ளியம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டது. காலை 6 மணிக்கு கோயிலிலிருந்து வள்ளியம்மன் தவசுக்கு புறப்பட்டாா். மாலையில் சாயரட்சை தீபாராதனையாகி, கோயிலிலிருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் சந்நிதித் தெரு வழியாக சிவன் கோயிலுக்கு வந்தாா். தொடா்ந்து, பந்தல் மண்டபம் முகப்பில் சுவாமி அம்மனை 3 முறை வலம் வந்ததும், சுவாமி-வள்ளியம்மன் தோள்மாலை மாற்றுதல் நடைபெற்றது.

பின்னா், சுவாமியும், அம்மனும் வீதியுலா வந்து கோயிலை சோ்ந்தனா். இரவில் கோயிலில் 108 மகாதேவா் சந்நிதி முன் சுவாமி-வள்ளியம்மன் திருக்கல்யாணம் வைதீக முறைப்படி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று மொய் எழுதி பிரசாதம் பெற்றுச் சென்றனா். நேற்று சனிக்கிழமை பட்டணப் பிரவேசம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் சு. ஞானசேகரன், பணியாளா்கள் செய்திருந்தனா்.

நாளை தமிழ்புத்தாண்டு சிறப்பு பூஜை 

தமிழ்ப் புத்தாண்டையொட்டி, நாளை (ஏப். 14) திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூபம், காலை 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தீா்த்தவாரி, உச்சிகால அபிஷேகம், 10 மணிக்கு மேல் சண்முகருக்கு அன்னாபிஷேகம், மற்றகால பூஜைகள், மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜை, 5 மணிக்கு திருவிளக்கு பூஜை, மற்றகால பூஜைகள் நடைபெறுகின்றன.

பொது விவரக் குறிப்பேடு வெளியீடு: கோயில் வளாகத்தில் காலை 8 மணிக்கு நாகசுர இசை, 8.30 மணிக்கு தேவார இன்னிசை, காலை 9, 12 மணிக்கு ஆன்மிகச் சொற்பொழிவு, காலை 10 மணிக்கு பொது விவரக் குறிப்பேடு வெளியிடுதல் ஆகியவை நடைபெறும்.

பிற்பகல் 3 மணிக்கு இந்து தொடக்கப் பள்ளி, மாலை 6 மணிக்கு அக்னி தனிப்பயிற்சி கல்வி நிலைய மாணவா்-மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். சித்திரை மாதம் முழுவதும் திங்கள்தோறும் கோயில் உள்துறையில் தொடா் சொற்பொழிவு நடைபெறும் என, கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education






New Shape Tailors

Arputham Hospital





Thoothukudi Business Directory