» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பதற்கான மகளிர் உதவி எண்.181 தொடர்புக் கொள்ளலாம்

வியாழன் 17, ஏப்ரல் 2025 9:23:51 PM (IST)



திருநெல்வேலி மாவட்டம், கொக்கிரகுளத்தில் அமைந்துள்ள மாவட்ட அறிவியல் மையத்தில், மாவட்ட சமூக நலத்துறை சார்பில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கமும், பெண் குழந்தைகளை பாதுகாப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் செய்தியாளர்களுடன் நடைபெற்றது.

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அந்த பகுதியில் பிறக்கும் ஆண், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தகவல் பலகை அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், கிராம சுகாதார அலுவலர்கள், நகர சுகாதார பணியாளர்கள் மூலம் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பொதுமக்களிடம் பெண் சிசுவதை தடுப்புச்சட்டம், குழந்தை திருமணம் தடுப்புச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பெண் குழந்தைகளின் கல்வி தொடர்பாகவும் குழந்தை திருமணம் தடுத்தல் தொடர்பாகவும், பெண்களுக்கு எதிரான பாலியல் தொடர்பாகவும் அடிப்படை சட்ட விதிகளும், உரிமைகள் குறித்தும், பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2013, வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961, குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் 2005, குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் 1098, மகளிர் உதவி எண் 181 தொடர்பாக பள்ளி, கல்லூரி மாணவிகள், தலைமை ஆசிரியர்கள், மகளிர் காவல்துறை அலுவலர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

பெண் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் மாவட்ட காவல் துறையின் மூலம் சிறுபான்மையினர் குழந்தைகளுக்கு சிலம்பம், கராத்தே பயிற்சி வழங்கப்படுகின்றது. முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்து முதிர்வு பெற வேண்டிய பயனாளிகளை கண்டறியவும், புதிய பயனாளிகளை சேர்க்கவும், வட்டார அளவில் பணிபுரியும் மகளிர் ஊர் நல அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பெண்களுக்கு ஏற்படும் குற்றங்கள் தொடர்பான உதவி எண்களுக்கு 8667344764 எண்ணில் தொடர்புக் கொள்ளலாம். புகார்கள் தெரிவிப்பவர்களின் விவரங்கள் காக்கப்படும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory